கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை

  • சென்னை: சென்னையில் தற்போதைய வெப்பநிலை 35°C ஆக இருக்கிறது ஆனால், காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக அது நமக்கு 44°C அளவுக்கு அனலாகவே நமக்கு தெரிகிறது.இதனால் கடுமையான வெப்பத்தை மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். தற்போதைய வானிலை சூரிய வெளிச்சத்துடன் காணப்படுகிறது. காற்றில் ஈரப்பதம் 58% ஆகவும், தென்கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 8 மைல் வேகத்தில் காற்றும் வீசி வருகிறது.

    Advertisement

    சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36°C முதல் 39°C வரையிலும், இரவு நேரக் குறைந்தபட்ச வெப்பநிலை 29°C ஒட்டியும் பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

    Advertisement

    சென்னை வானிலை மையத்தின் கணிப்புப்படி, இன்று பகல் நேரத்தில் மழைக்கான வாய்ப்பு மிகக் குறைவாக (சுமார் 10%) இருந்தாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது..

    இந்த சூழலில் தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக திடீரென மேகக் கூட்டங்கள் திரளத் தொடங்கியுள்ளன. கடந்த சில மணி நேரங்களாக நிலவிய கடுமையான அனல் காற்று மற்றும் வெயிலின் தாக்கம் குறைந்து, வானம் சட்டென மேகமூட்டத்துடன் மாறத் தொடங்கியுள்ளது. வறண்ட காற்று மறைந்து, லேசான குளிர்ச்சியான காற்று வீசத் தொடங்கியிருக்கிறது. இது மழை வருவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    அடுத்த 1 முதல் 2 மணி நேரத்திற்குள் தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய திடீர் கோடை மழை பெய்ய வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது. தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மேகமூட்டம் தீவிரமடைந்து மழை பெய்யத் தொடங்கினால், அங்கிருந்து வீசும் குளிர்ச்சியான காற்று அடுத்த 1 அல்லது 2 மணி நேரத்தில் சென்னை நகருக்குள்ளும் வானிலையை மாறும் வாய்ப்பு உள்ளது. மாலை அல்லது இரவு நேரத்திற்குள் சென்னை நகரின் சில பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய மழைக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    however, due to atmospheric humidity, it feels as hot as 44°C. Consequently, residents are enduring severe heat. The current weather conditions are sunny, with humidity levels at 58% and winds blowing from the southeast at a speed of 8 miles per hour.