For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முகத்தில் தெளித்த சாரல்...

By Staff
Google Oneindia Tamil News

பாஷோவிடம் ஒரு கவிதைச்சீடன் ஓடிவந்து
மகிழ்ச்சியால் குதித்துச் சொன்னான்

எனக்கு ஒரு கருத்து உதித்தது
கவிதையின் கரு இதுதான்-
தட்டானின் இறகுகளைப்பறி
சிகப்பு மிளகு கிடைக்கும்

பாஷோ சொன்னார்

இது ஹைக்கூவின் நோக்கத்துடன் அமையவில்லை
மிளகுக்கோட்டையில்
சிறகுகளைச் சேர்
தட்டான் பூச்சி உன் கையில்
என்று எழுதுவாய்-
ஹைகூவின் இலக்கணத்திற்குப் பொருந்துவதாய் அமையும்

இதுதான் ஹைக்கூவின் நோக்கம்

வன்முறை, அகிம்சை, குரூரம்,பரபரப்பு ஆகியன ஒரு போதும் ஹைகூ சூழலுக்கு ஏற்றதாக இருந்ததில்லை.
ஆழமான இலையுதிரில்
இந்தப் புழு (கம்பளிப் புழு)
இன்னும் பட்டாம் பூச்சியாகவில்லை

Deep into autumn
and This caterpillar
still not a butterfly
-Basho

வாழக்கை நம்பிக்கையிலும், அழகுணர்விலும் அடங்கியிருக்கிறது
நாளை விடியும் என்ற நம்பிக்கையில் தான் தூங்கப் போகிறோம்
உணவு செரிக்கும் என்ற எண்ணத்தில் தான் சாப்பிடுகிறோம்
அந்த மூச்சுக்காற்றுக்கு வாயுமண்டலத்தில் பஞ்சம் இருக்காது
என்று தான் சுவாசிக்கிறோம்.

நம்பிக்கையுள்ளவன் காடுகளில் விதை கூட விளக்குகளாகி
எதிர்காலத்தை வெளிச்சமாக்குகிறது.
உண்மைதானே !
ஒவ்வொரு விதையும் விருட்சமாகும்
கனவுகளையும் தேக்கி வைத்திருக்கின்றனவே-

மாலை உதிரப்போவதை நினைத்தால்
பூக்களால் காலையில் புன்னகை பூக்க முடியுமா?

நாளை சிறகு முளைக்கும் எனும்
நம்பிக்கையில்தான் -
வண்ணத்துப் பூச்சியாகும் கனவில் தான்
அவை கூட்டுப் புழுவாகின்றன-

கூட்டுப் புழுவாவது என்பது என்ன மனநிலை?
அது கனவா?
மயக்கமா?
உறக்கமா?
Dormancy ஆ!
Coma வா!

கூட்டுப்புழுவாவது எப்படி என்கிற விடை
அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்-
கூட்டுப்புழுவின் அனுபவத்தைப் பெற
கூட்டுப் புழுவாக சம்மதிப்பவர்களால் மட்டுமே முடியும்-

கூட்டுப்புழுவின் நிலை-
உறக்கமுமில்லை-
மயக்கமுமில்லை-
அது மவுனம்-
தவம்-
வைராக்கியம் கூடிய தவம்

நம்பிக்கையுடன் கூடிய தவம்-
தனக்கும் சிறகுகள் முளைக்கும்
வானவீதியில் பறந்து செல்லமுடியும்
என்கிற உந்துதலுடன் கூடியது-

எத்தனைக் கூட்டுப்புழுக்கள் பட்டாம்பூச்சியாகின்றன?
யாருக்குத் தெரியும்?
ஆகமுடியாமல் போனால்
அது மரணமல்லவா?

ஒவ்வொரு கம்பளிப் பூச்சியும்
வீரமரணத்திற்கு சம்மதித்து தான் கூட்டுப் புழுவாகிறது-

இலையுதிர் காலமும்-
கூட்டுப் புழு பருவமும்
ஒரே மாதிரி-

இரண்டுக்கும் பிறகு பூக்கள் முளைக்கின்றன-
பூக்கள் என்றும் சிறகுகள் மரத்திற்கு
சிறகுகள் என்றும் பூக்கள் புழுவிற்கு-

(தூறல் வரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X