For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்ட் கால-ரி

By Staff
Google Oneindia Tamil News

Lakshmi Suma-Paintingநதியழகு, கடல் அழகு, பறவைகள் அழகு, மான்கள் அழகு....

இத்தனை அழகும் மொத்தமாக சேர்ந்து ஒரு பெண்ணுக்கு அழகு செய்தால்...?

மனம் ஆர்வமானது. முதலில் பார்த்தது புகைப்படத்தில் தான். மான், நதி, புறா, மயில்என்று அத்தனை இயற்கை அழகுகளும் கொட்டிக் கிடக்கிறது. அந்த ஓவியத்தில் நீங்கபார்த்தது சாதாரண ஓவியங்களல்ல, பட்டுச் சேலைகளின் மீது தீட்டப்பட்டஓவியங்கள். பெண்ணும் அழகு, பட்டும் அழகு. இரண்டு அழகுகளுக்கும், அழகுசேர்க்கிறது இந்த ஓவியங்கள்.

ராஜமுந்திரியில் உள்ள லெஷ்மி சுமாவை சந்தித்தோம்.

"சின்ன வயசிலேர்ந்தே படம் வரையறதுன்னா பிடிக்கும். இந்த ஓவியங்களை வெறும்அட்டையிலும், சுவர்களில் தீட்டுவதோடும் நின்றுவிடக் கூடாது. இன்னும் இன்னும்ஏதாவது செய்யணுமேன்னு யோசித்துதான் பட்டுப் புடவை ஓவியங்கள் தீட்டினால்என்ன என்று தோன்றியது.

என் கணவர் மேலும் என்னை உற்சாகப்படுத்தினார். டிசைன்கள் இல்லாத ப்ளைன்பட்டுப் புடவைகளில் இந்த ஓவியங்களைத் தீட்டினால் நன்றாக இருக்குமே என்றுஐடியா கொடுத்தார். இன்று, தேவைகளுக்கு ஏற்ப புடவைகளை தயார் செய்துகொடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு டிமாண்ட்.

முதலில் சாதாரணமாக அவுட்லைன் கொடுத்து வரைந்து கொள்வேன். பின்,வர்ணங்கள் புடவைகளின் கலர், தரத்தைப் பொறுத்து படங்கள் வரையஆரம்பிப்போம். சில புடவைகள் (டிசைன்கள்) ஒன்றிரண்டு நாட்களில் தயாராகும். சிலபுடவைகள் தயாராக ஒரு மாதம் கூட ஆகிவிடும்.

தனியாகவே செய்கிறீர்களா? அல்லது வேலைக்கு ஆட்கள் இருக்கிறார்களா?

Lakshmi Suma-Paintingதொழிற்சாலையிலோ, மெஷினோ வைத்து இதை தயார் செய்ய முடியாது. மேலும்வேலைக்கு வருகின்ற ஆட்கள் ஓவியத்தில் ஆர்வமுடையவராக இருக்கவும் வேண்டும்என்பதால் இதில் பல சிரமங்கள் இருக்கிறது. முதலில் அவுட் லைன் போட்டு, படத்தைகாண்பித்து என்னென்ன கலர்கள் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் குறித்துக்கொடுப்பேன். அதில் ஓவியத்தைத் தீட்டுவார்கள்.

எனக்கு உதவியாக எட்டு பேர் வேலை செய்கிறார்கள். மேலும், எட்டுமாணவர்களுக்கு ஓவியம் வரைவது பற்றிய பாடத்தையும் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.

எனக்குப் பிறகு, இந்த புடவை ஓவியம் நின்றுவிடக் கூடாது என்பதற்காக...என்றுசொன்ன லெஷ்மி சுமாவிடம்,

காஞ்சிபுரம் பட்டு, ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய்வரை இருக்கிறது.இதிலும் அந்த மாதிரி விலைகள் இருக்கிறதா? என்றோம்

ஆயிரத்துநூறு (ரூ 1100) ரூபாயில் இருந்து ஐந்தாயிரம் ரூபாய் வரை புடவைகள்இருக்கின்றன. இதுவே அழகாகவும், சிம்பிளாகவும் இருக்கும். ஐம்பதாயிரத்துக்குபுடவை ஓவியம் வேண்டும் என்று செயல் பட்டால் புடவையின் அழகு கெட்டு விடும்.சிம்பிளாக இருந்தால்தான் இந்த புடவைகள் அழகாக இருக்கும் என்று சொன்னலெஷ்மி சுமா..

மாதத்திற்கு எட்டு முதல் பத்து புடவைகள் வரை தயார் செய்து விற்பனையும்செய்கிறாராம்.

ஓவியத்திற்கான பெயிண்ட், புடவைக்கும், உடம்பிற்கும் கெடுதல் இல்லாதபெயிண்ட்டால்தான் தயாரிக்கப்படுகிறது என்றும் சொன்னார். மறக்காமல் ஒருவிஷயத்தைச் ச்ொல்கிறார், ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண்இருப்பாள் என்று சொல்வார்கள். என் விஷயத்தில் அதில் மாற்றம் இருக்கிறது. என்வெற்றிக்குப் பின்னால் என் கணவர் ரகுராம் பிரசாத்தான் என்கிறார் லெஷ்மி சுமா.

எந்த வகையான ஓவியப் புடவைகளை பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்?

பறவைகள், இயற்கை காட்சிகள் - வரையப்பட்ட ஓவியங்களை பெண்கள்விரும்புகிறார்கள். குதிரை ஓவியப் புடவைகளையும் பெண்கள் அதிகம் விரும்பிவாங்குகிறார்கள் என்கிறார்.

ஏற்கனவே.. நமது மனங்களில் பட்டாம் பூச்சி பறக்கவிடும் நம்ம ஊர் பெண்கள் இந்தபட்டோவியப் புடவைகளையும் கட்டிக் கொண்டால் ..! என்னை வதைப்பதுகொடுமையடிஎன்று பாடாதீர்கள். வாங்கிக் கொடுத்து அழகு பாருங்கள்.

மேடம், ஒரு சின்ன ரிக்வெஸ்ட். ஆண்களுக்கும் ஓவியச் சட்டை பேண்ட் என்றுகொஞ்சம் முயற்சி செய்யுங்கள் ப்ளீஸ்! என்கிற வேண்டுகோளோடு விடை பெற்றோம்- லெஷ்மி சுமாவிடமிருந்து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X