For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்

By Staff
Google Oneindia Tamil News

அவங்க பொழுது எப்படிப் போகுதுன்னு கவனிச்சதுல, பசுவ மேய்க்க. பாலு மோரு வெண்ணெய்ன்னு சாப்பிட, வீட்டுக்குப் பிறத்தால இருக்க

உள்ளங்கை அகல மண்ணுல சம்பு, உள்ளி, பச்சைமிளகா, முருங்கைன்னு தோட்டம் போட்டு அத கவனிக்க, அதுகளுக்கு திலா இறைச்சி பாட்டும் படிப்புமாதண்ணீரப் பாச்ச, இப்பிடி பொழுது தட்டுதல் இல்லாம ஆனந்தமா போகுது.

அந்தி ஆயிட்டா பசு மாடுகள குளுப்பாட்டி, அவுகளும் குளிச்சி, தொழுவுக்கும், பசுவுக்கும் சூடம் பொருத்தி காமிச்சி இருந்தவுங்க, இப்ப அம்மிக்கும் குளிக்கவச்சி சாப்பாடு பண்ணி வச்சி மேலுகால் பிடிச்சி விட்டு பணிவிடையும் செய்தாங்க.

இதையெல்லாம் பாக்கப்பாக்க பார்வதிக்கு, என்ன பொழப்பு நம்ம பொழப்புன்னு தோணிட்டது. நாமளும் இவங்களப் போல இருக்கணும்ன்னுதோணிட்டது.

ராத்திரிக்கு எல்லாரும் தூங்கின பிறகு, சிவனோட பேசுனா. எல்லாத்தையும் சொன்னா.

பரமசிவன் சொன்னாரு:

இன்னாருக்கு இன்ன இன்ன வேலைன்னு படைக்கும்போதே தலையில எழுதியாச்சி. அதெ ஒண்ணும் மாத்த முடியாது. அவங்க மாடுக மேய்ச்சி பொழப்பு நடத்திசந்தோசமா இருக்காகன்னா, நாம உலகத்துக்கு நல்லதும் பொல்லதும் செஞ்சி சந்தோசமா இருப்பம் சிவனார் சொன்னது பார்வதிக்கு சரீன்னு படல.

என்னா பிழைப்பு நம்மது; புருசன் ஒரு திக்கம் நாம ஒரு திக்கம் சாப்புட்டீகளா வச்சீகளான்னு கூட கேக்கத்துக்கில்லாம, விவகாரமும் சண்டையுமா அவர்கூட்டம் கும்பல்ன்னு அலைய, நாம பொட்டாம் பொட்டாம்ன்னுட்டு ஒத்தையில அம்பது வேலைக்காரகள சுத்தி வச்சிக்கிட்டு எந்த வேலையும்இல்லாம உக்காந்துக்கிட்டு இருக்கதும் ஒரு பிழைப்பா!

சிவனார் நம்மோட வந்தாலும் சரி வல்லேன்னாலும் சரி, நிம்மதியா ஒரு பசுமாட்டையும், ஒரு வேலைக்காரியவும் வச்சித் தொடங்கிறவேண்டியதுதாம்ன்னு ஆரம்பிச்சிட்டா.

அத்துவானக் காட்டுல ஒரு இடத்துல, ஓலைக் குடிசையும், தொழுவும் போட்டு ஒரு வேலைக்காரியோட தங்கீட்டா.

மறுநாளு விடியமுன்னே மாடு அந்தக் கத்து கத்துது. ஏங் கத்துதுன்னு தெரியல. வேலைக்காரி கிட்ட கேட்டா தெரியலங்கிறா. பால் கறக்கிறநேரமாச்சிங்கிறது வேலைக்காரிக்கு தெரியல. (பூலோகத்துக்காரின்னா தெரியும்!)

நேரம் ஆயிக்கிட்டே போகுது. தொழுவுல சாணி வீசி நாறிக்கிடக்கு. இதை இல்லாம பசுவுக்கு வயிறு கொடேர்னு வத்திப் போயிக் கிடக்கு.என்னதாம் செய்யிறது, எப்பிடி பால் கறக்கிறதுன்னு தெரியல. வேலைக்காரியப் பிடிச்சி வெறசுதா.

அவ, எனக்கு இதுபத்தி என்னம்மா தெரியும்; பால் பழம் எடுத்து வைக்கச் சொன்னா தெரியும்; பட்டுமெத்தை விரிச்சி வக்க, மயில் இறகு விசிறிகொண்டு விசுற, தலைமுடிக்கு சவ்வாது, சாம்பிராணிப் புகை போட இப்படித்தாம் தெரியும் எனக்குன்னு சொல்லீட்டா.

இவுக இப்படி தவிதாயப்பட்டுக்கிட்டு இருக்கும்போது பரமசிவன் வந்தார் பார்வதி எப்படி இருக்கான்னு பார்க்க!

சிரிப்புத் தாங்கல அவருக்கு. அவரைப் பாத்து வலிப்புக் காட்டுனா பார்வதி.

சிவனார் சொன்னார்:

மனுசருக்குத்தான் மனுசப்பசு லாயக்கு ; நமக்கு சரிப்பட்டு வராதுன்னு சொல்லி, இந்த வேலைக்காரியையும் அந்தப் பசுவையும் இணைச்சி ஒரு புது வடிவமாசெஞ்சி காமதேனுன்னு பேர் வச்சிக் கொடுத்தார்.

எதை நினைச்சாலும் கொண்டாந்து தரும்; நாம அதுக்கு ஒண்ணுந்தர வேண்டாம். அப்பிடி ஒரு அபூர்வ பசு அது.

சிவனும் பார்வதியும் பூலோகத்தை பாக்க வரும்போதெல்லாம் இப்பிடி ஏதாவது ஒரு புதுசு நடக்கிறது வழக்கந்தாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X