For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்

By Staff
Google Oneindia Tamil News

ஒரு காட்டுல ஒரு முயல் குட்டியும் நரிக்குட்டியும் ரொம்பச் சேத்தியா ஒன்னுக்கு மேல ஒன்னு அம்புட்டு உசுராஇருந்தது. பிரியமான பிரியமில்ல; அப்பிடி ஒரு பிரியம்.

தாங்கமுடியாத பிரியம் வந்துட்டா நாமெல்லாம் என்ன சொல்ரோம். ""ஒன்ன அப்பிடியே கடிச்சிச்தின்னறலாமான்னு இருக்கு""ங்கிறோமே அப்பிடி ஆயிட்டு வருது நரிக்குட்டிக்கு. வளந்த பிறகு அதது இரைஎடுக்கப்போற நேரந்தவிர மத்த நேரமெல்லாம் ஒன்னுக்கு மேல ஒன்னு விழுந்து புரண்டுவிளையாடிக்கிட்டேதானிருக்கும்.

விளையாடி அலுத்துப் போன நேரத்துல அதுக ஒன்னுக்குமேல ஒன்னு தலைவச்சிப் படுத்துத் தூங்கிரும். வரவரநரிக்கு முசக்குட்டி பேர்ல பிரியம் அதிகமாயிட்டே வருது. முசக்குட்டியோட உடம்புலயிருந்து வர வாடை நரிக்குரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதோட கழுத்துப்பக்கம் கக்கம் இடுப்புல இப்படி முகத்தக் கொடுத்து மோந்துவாடைபிடிச்சி மூச்செ வேகமா இழுக்கும். அந்த வாடை தர்ற போதையில முசக்குட்டியோட குடும்பத்தையேசெல்லமாத் திட்டும். திட்டத் திட்ட முசக்குட்டிக்கு சிரிப்பாணி அள்ளும்.

சிரிக்கவா செய்த; சிரிக்கவா செய்தன்னு மூக்கால அழுத்தி கிச்சங்காட்டும், பொய்க்கடி கடிக்கும். கவுட்டுக்குள்ளமூஞ்சியக் கொடுத்து நெம்பி மேல வீசிப் பந்தாடும். இப்பிடி வீசி வீசி உ.யரத் தூக்கிப் போட்டு பிடிக்கிறபோதுமுசக்குட்டிக்கு உடம்பு கூசும். ஓ..ஓ..ன்னு பலமா கூப்பாடு போட்டுச் சிரிக்கும். வனத்துல இருக்க செடி கொடிஎல்லாமே இத வேடிக்கை பார்க்கும்.

எல்லாஞ் சரிதாம்; நல்லாத்தானிருக்கு. இந்தப் பொய்க்கடிதான் சில சமயம் நிசக்கடி போலயே வலி தாங்கிக்கிடமுடியல.

""ஆனாலும் நீ ரொம்ப மோசம்""ன்னு முசக்குட்டி சிணுங்போது கண்ணீரு பிதுங்கும். அப்பொ நரிக்கு பயம்வந்துரும், நம்ம விட்டு முசக்குட்டி பிரிஞ்சி போயிருமோன்னுட்டு.

அருகங்காட்டுல பில்லுக்கு (புல்) பஞ்சங் கிடையாது. காலையில பில்லு நுனியில பனி முத்துக் கோர்த்தஅருகம்பில்லுன்னா முசலுக்கு ரொம்பப் பிரியம். பனித் துளியோட சாப்பிடறதோட சரி; பிறகு தண்ணியேகுடிக்காது.

முசக்குட்டிக்கு தினோமும் இரை கிடைக்கிற மாதிரி நரிக்கு இரை தினோமும் கிடைக்காது. அதுக்கு பசியத் தாங்கித்தாங்கிப் பழக்கம். சில சமயம் பசியை தாங்க முடியாமலும் ஆயிரும். அப்படியான ஒரு சமயத்துலதாம் நரிக்குஅந்தக் கெட்ட புத்தி வந்தது!

கண்ணுக்கு கண்ணாவும் உசுருக்கு உசுராவும் பழகிக்கிட்டிருக்கிறப்ப எப்பிடி மனசார தன்னோட சேத்தியானமுசக்குட்டிய கடிச்சிக் குதறி ரத்தத்தை குடிச்சி கறியவும் திங்கணும்ங்கிற புத்தியும் யோசனையில வரும்?

அய்யோ நமக்கு புத்தி இபப்டிப் போகுதேன்னு நினைக்க வருத்தமாவும் இருந்தது நரிக்கு.

மழைக்காலம் முடிஞ்சி பனிக்காலமாயிட்டது. பாத்த இடமெல்லாம் அருகம்பில்லு தளிர்விட்டு செழிச்சி, பாத்ததும்திங்கும்படியா இருந்தது. அந்தப் புல்லை செழிக்கத் தின்னுதின்னு முசக்குட்டி பசபசன்னு சதைபோட்டு உடம்புமின்னாப்பா ஆயிட்டது. பாத்தாலே கடிச்சித் திங்கணும் போலத் தோணும்.

என்னதாம் செய்யிறதுன்னு தெரியல நரிக்கு. முசக்குட்டியோட வம்புச்சிலுகை இழுத்து அதோட சண்டைபோடணும். அந்தச் சாக்குல அதக் கடிச்சித் தின்னுறலாம்ன்னு தோணுது. ஆனா சிலுகை எப்பிடி இழுக்கிறது... ,இப்பிடி யோசன ஓடிக்கிட்டு இருக்குறப்பத்தாம் முசக்குட்டி வகுத்துக்கு இரை மேஞ்சிட்டு நரி இருக்கிற இடத்துக்குவந்து சேந்தது.

வந்ததும் நரி ஓடிப்போயி முசக்குட்டிய கட்டிப்பிடிச்சி ஆசையா சொன்னது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X