For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கத சொல்றாரு - கி.ராஜநாராயணன்

By Staff
Google Oneindia Tamil News

சந்தோசம் ஆயிட்டது ராஜாவுக்கு.

அப்பிடியே ஆகட்டும்ன்னு உத்தரவு போட்டுட்டார்.

சந்தோசமா வந்து வேலய ஒத்துக்கிட்டார் அதிகாரி.

முதல்காரியமா தனக்குக்கீழே வேல பார்க்கிற குட்டி அதிகாரிக, வேலையாட்க எல்லாத்தையும் கூப்டு கடல்கரை பூராவும் வரீசைய நிக்கச்சொல்லி. இப்பொழுதுலயிருந்து யாரும் கடல்ல காலு வைக்கப்படதுன்னு உத்தரவு போட்டார்.

படகுகளோ, கப்பல்களோ துறைமுகத்துலயிருந்து புறப்படவும் கூடாது. வரவுங்கூடாது ன்னு கரால உத்தரவு போட்டார்.

யாரும் மீன் பிடிக்கப் போக முடியல. சரக்குக் கப்பல்க நகர முடியல. துறைமுகத்துக்குள்ள வர முடியல. தினர்றாங்க கப்பல்வாரிங்க.

அதிகாரியப் பாத்து, இது என்ன புதுசா இருக்கு. ஒலகத்துல இல்லாத வழக்கமான்னு கேட்டாங்க.

ஓன்ணும் பண்ண முடியாது. ராசாவோட உத்தரவு ன்னாரு அதிகாரி.

இந்த அதிகாரி எப்படியாப்பட்டவர் ன்னு வியாபாரிக விசாரிச்சித் தெரிஞ்சி வச்சிக்கிட்டாக. கப்பல் வியாபாரின்னா லேசா; பை பையாத்

தங்கக் காசு வந்தது. அதுக்கடுத்த வியாபாரிக வெள்ளிக்காசு, அதுக்குக் கீழே இருக்கிறவங்க செப்புக்காசு ன்னு வீடு நிறையுது.

கொஞ்ச நாள் போச்சி.

ராஜாவுக்கு உள்ளூர வருத்தந்தாம். பாவம் பிள்ளைக் குட்டிகாரன். செலவாளி, சோக்காளி. என்ன செய்யிரானோ ன்னு ஒரு ஆள விட்டு விசாரிச்சிட்டு வரச்சொன்னார்.

விசாரிக்கப் நடந்து போன ஆள், வரும்போது ஓடி வந்தார்!

அடேயப்பா, அடேயப்பான்னு வாப்பாரிக்கிட்டே வந்தார்.

ரொம்பக் கஷ்டப்பட்டுதானோன்னு கேட்டார் ராஜா.

நாமதான் கஷ்டப்படணும்; அவனுக்கென்ன ராசாவுக்கின்னார்.

ராஜாவால நம்ப முடியல. அவர் வர்ணிச்சத. அந்த அதிகாரியவே வரவழைச்சி அவர் வாயாலயே அந்தக் கதையக் கேட்டார்.

எப்பிடியப்பா இப்பிடி ஒரு தொளில சத்தங்காட்டாம படு லாபகரமா ஒன்னால - ஒரு ஆவலாதியும் இல்லாம - நடத்த முடியுதுன்னு கேட்டார்.

இந்தத் தொழில்ல மட்டும் சுயநலம்ங்கிறதே இருக்கப்படாது மகாராஜான்னு அதிகாரி தொடங்கினார்,

கிடைக்கிறதெல்லாம் நமக்குத்தான்னு நினைச்சோம் ... தொலைஞ்சொம். கடவுளுக்குப் பொதுவா நடந்துக்கிடணும்.

எப்பிடி?

கிடைக்கிறத பதவி அந்தஸ்துக்குத் தக்கன பிரிச்சித்தரணும்.

அது எப்பிடி?

நூறு களஞ்சிப் பொன்னு கிடைச்சதுன்னு வச்சுகிடுங்க, அதுல பத்துக் களஞ்சிய தருமத்துக்குத் தந்துரணும்.

தருமத்துக்குன்னா?

ஏழை பாழை கோயிலு குளம் சத்திரம் சாவடி இப்பிடி.

சரீ.

ஒரு 15 களஞ்சிய நாம - அதாவது அடியேனுக்கு வச்சிக்கிடணும்.

மீதிய - 30 களஞ்சிய அரமனைக்குத் தந்துரணும்.

அரமணைக்கா!

ஆமா, மகராசா; அரமனைய வச்சித்தான நம்ம பிழைப்பெ. அவுகளுக்குத் தாராட்டி எப்பிடி?

என்ன சொல்ற; அரமனைக்குத் தர்ரியா?

ஆமா மகராஜா; அடியேன் பொய் சொல்வனா உங்ககிட்ட.

விசாரிச்ச பிறகுதாம் ராஜாவுக்கே தெரிஞ்சது;

மகாராணிதாம் அத ஒழூங்கா வாங்கிட்டிருக்காங்கன்னு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X