For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரதி பக்கம்

By Staff
Google Oneindia Tamil News

ஏப்ரல் 04, 2001

Subramaniya Bharathi

சுயசரிதை

கடவுள் எங்கே இருக்கிறார்

சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல்லென்று ஹிரணியன் தான் உறுமிக் கேட்க
நல்லதொரு மகன் சொல்வன் - தூணி லுள்ளன்
நாரா யணன் துரும்பி லுள்ளான் என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை,
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை:
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ? (15)


கேளப்பா, சீடனே! கழுதை யொன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்:
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்:
விண்மட்டும் கடவுளன்று எண்ணும் அஃதே. (16)


சுத்த அறி வேசிவமென் ரைத்தார் மேலோர்:
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்,
வித்தகனாம் குருசிவமென் றுரைத்தார் மேலோர்:
வித்தை யிலாப் புலையனு மஃதென்னும் வேதம்:
பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
நித்ததும் தருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழத்து வீரே? (17)


உயிர்களெல்லாம் தெய்யவமன்றிப் பிறவொன்றுமில்லை:
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்:
பயிலுமுயிர் வகைமட்டு மின்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்:
வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப் பொருள்கள் அனைத்தம் தெய்வம்:
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்! (18)

(தொடரும்)
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X