For Daily Alerts
Just In
பாரதி பக்கம்
பிப்ரவரி 19, 2001
தமிழ்மொழி வாழ்த்து
1.வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
2.வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!
3.ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
4.எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!
5.சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலஃகுக வையகமே!
6.தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!
7.வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
8.வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
(தொடரும்)
Comments
Story first published: Wednesday, February 7, 2001, 16:50 [IST]