For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலித்தால் உடம்புக்கு நல்லது!!

By Staff
Google Oneindia Tamil News

Love heart
காதலில் ஈடுபடுவோருக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல் வயப்பட்டவர்களுக்கு உடலும், மனமும் நிதானமாகவும், அமைதியாகவும் இருக்குமாம். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றவர்களை விட சிறப்பாக இருக்குமாம்.

சர்வதேச மன நல உடலியல் இதழில் இதுதொடர்பான ஆய்வறிக்கையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் காதலில் ஈடுபடுவோருக்கு நரம்புகளின் வளர்ச்சியும் சீராக இருக்குமாம். நரம்பு மண்டலம் முழுமையாக செயல்படும், நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை நரம்பு செல்கள் வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதெல்லாம் காதல் வயப்பட்ட ஒரு வருடத்திற்கு மட்டும்தானாம். அதன் பின்னர் பழைய குருடி கதவைத் திறடி கதையாக, 'நார்மல் லெவலுக்கு' காதலர்களின் உடல் ஆரோக்கியம் திரும்பி விடுமாம்.

அதற்காக வருடத்திற்கு ஒரு 'புதுக் காதல்' என்று போகலாமா என்று ஆய்வாளர்கள் கூறவில்லை!

'ஆர்க்யுமென்ட்' ஆரோக்கியத்தைக் கெடுக்கும்!

அதேபோல கடுமையாக சண்டை போடுவதும், வாதிடுவதும் கூட உடல் நலத்தைக் கெடுக்கும் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் கடுமையாக வாதிடும்போது அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்குமாம். சில மணி நேரங்களில் இது சரியாகி விடும். ஆனால் சில வாரங்கள் கழித்து இந்த சம்பவத்தை நினைத்தால் கூட அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்குமாம்.

எனவே யாருடனாவது சண்டை போட்டாலோ அல்லது வாக்குவாதம் செய்தாலோ, கோபமாக பேசினாலோ அந்த சம்பவத்தை அத்தோடு மறந்து விடுவது நமது உடம்புக்கு நல்லது. நினைத்துக் கொண்டே இருந்தால் சிக்கல் நமக்குத்தான்.

பொறாமைப்பட்டாலும் சிக்கல் ..!

அதேபோல பொறாமை உணர்வும் கூட நமது உடம்பைப் பாதிக்குமாம். பொறாமை என்பது பயம், கோபம், பதட்டம் ஆகியவற்றின் கலவை என்கிறார் ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் ஜேன் பிளம்மிங்.

பொறாமை உணர்வு ஏற்பட்டால் அது ரத்த அழுத்தம், இதயப் பதட்டம், அட்ரீனலின் அளவில் மாறுபாடு, சோர்வு, பதட்டம், பய உணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தி உடல் நலனைப் பாதிக்கும் என்கிறார் பிளமிங்.

எனவே, காதலிங்க, சண்டை போடாதீங்க, பொறாமைப் படாதீங்க!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X