• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தைரியமும், பயமும் - கலைமணி காலாகாலமாக தலைவர்கள் தொண்டர்களுக்கும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும்,பெற்றோற்கள் பிள்ளைகளுக்கும், கவிஞர்கள் பாமரனுக்கும், எழுத்தாளன் வாசகருக்கும்சொல்லிவரும் வாசகம் இதுவாகத் தான் இருக்கவேண்டும்.

By Staff
|

காலாகாலமாக தலைவர்கள் தொண்டர்களுக்கும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கும்,பெற்றோற்கள் பிள்ளைகளுக்கும், கவிஞர்கள் பாமரனுக்கும், எழுத்தாளன் வாசகருக்கும்சொல்லிவரும் வாசகம் இதுவாகத் தான் இருக்கவேண்டும்.

September 11th attackவாழ்க்கையில் சாதிக்கவேண்டும் என்றால் அளவுக்கு அதிகமாக தைரியமும்,தன்னம்பிக்கையும் வேண்டும்.அப்படி இருந்ததினால் தான் இன்றைக்கு என்னால் இப்படி இருக்கமுடிகிறது என்றும்,நீயும் நாளைக்கு நல்ல நிலைமையில் இருக்கவேண்டும் என்றால் இப்படி எல்லாம்இருந்தால் தான் முடியும். இல்லை என்றால் தோற்று போய், முடங்கி கிடப்பாய்.என்னவாக இருக்கப்போகிறாய் என்று நீயே முடிவு செய்துகொள் என்றஏகவசனங்கள்களை அன்றாடம் காண்கின்றோம்.

உண்மையில் இவர்கள் எல்லாம் விவரிப்பதுபோல் அளவுக்கு அதிகமான தைரியமும்,தன்னம்பிக்கையும் இருந்தால் வாழ்க்கையில் சாதனையாளனாக வரமுடியுமா. இவர்களதுவாசகங்கள் சரிதானா என்று கேட்டால், என்னை அனேக வாசகர்கள் பைத்தியம்போலும் என்று தான் நினைப்பார்கள்.

ஆனால் உண்மை நிலை என்ன என்று கேள்வி கேட்க அஞ்சும் அனைவரது முடிவும்சொன்னதை செய்யும் ஏவலாளியின் நிலையாகவும், என்ன ஏது என்று ஆராயும் மனம்படைத்த அனைவரும் விஞ்ஞானியாகவோ அல்லது தத்துவ மேதைகளாகவோ ஆகிவிடுவதும்இல்லை, இதுவே யதார்த்தமான உண்மை. அப்படி இருக்க இவர்கள் மேலேசொன்னதுபோல் அளவுக்கு அதிகமான தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தால்மட்டுமே சாதிக்கமுடியும் என்று அவர்கள் சொல்ல காரணம் என்னவாக இருக்க முடியும்.

இன்றைக்கு தீவிரவாதம், பயங்கரவாதம் என்று இந்தியா மட்டும் அல்ல, அனேகமாகஅனைத்து உலகத்தின் பிரச்சனையும் இதுவாகத்தான் இருக்கமுடியும். இன்றைக்குஅமெரிக்க தேசம் முதல் கடைக்கோடி தேசம் வரை, வன்முறையை எதிர்கொள்ளதனது பொருளாதாரத்தின் அனேக பங்கினை செலவிட்ட பின்னே தான், தனது நாட்டுநல பணிதிட்டத்திற்கு என்று நிதியை செலவிடுகிறது. இந்த செய்கையின் அர்த்தம்என்னவாக இருக்கவேண்டும்.

மிகுந்த தன்னம்பிக்கையும், தைரியமும் வெறியாகஉருவெடுத்த பிறகு நியாயம் எது, தர்மம் எது என்று யோசிக்கக்கூட தயாராகஇல்லாத அந்த தைரியசாலிகளாகளிடம் இருந்து நாட்டையும், அப்படி அந்தஅநியாயக்காரர்கள் தொடுக்கப்போகும் தாக்குதலில் பலியாகப்போகும்பயந்தவர்களை காக்கும் பணியில் லட்சாதி லட்சமாக பணத்தை இறைத்து பொதுமக்களை காத்துக்கொள்ள தான் எல்லா அரசும் தனது பொருளாதாரத்தின் அனேகபங்கையும் செலவிட்டு வந்துக்கொண்டு இருக்கிறது, இனிமேலும் செலவிடவும் போகிறது.

இப்படி அரசு செலவு செய்யும் பொருள் யாருடையது தெரியுமா, தான் உண்டு தனதுவேலை உண்டு என்று இருக்கிறானே அவனது வரிப்பணத்தில் இருந்துதான் இந்தபாதுகாப்பை அரசாங்கம் அவனுக்கு வழங்குகிறது. எப்படியும் மற்றவர்கள் தொழிலும்செய்யப்போவதில்லை வரியும் கட்டப்போவதில்லை, அப்படியிருக்க அரசாங்கத்தின்கஜானாவை நிரப்புவது என்னவோ சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நியாயமான தொழில்நடத்துபவன் மட்டுமாகத்தான் இருக்கமுடியும்.

வேறுவிதமாக சொல்லப்போனால் அவனுடைய வாழ்க்கையின் சம்பாத்தியத்தில் ஒருபெரும் தொகை அனேகமாக அவனது பாதுகாப்பிற்கே போய்விடுகிறது. அப்படிஇருக்க, பாதுகாப்பிற்கு போக மிச்சம் இருக்கும் பொருளில் தான் இவனதுஎதிர்காலத்தின் வசதியையும், இவனது சந்ததியினர் அனுபவிக்கும் வசதிகளையும்செய்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் இருக்கிறது.நேர்மையாக இருக்கும் தேசத்தில் வேண்டுமானால் அழைத்தவுடன் தனக்கு பாதுகாப்புகிடைக்கும், ஆனால் இந்தியாவோ, ஊழலில் பேர் போன நாடு. இதில் சட்டத்தால்பாதுகப்பு இருக்கிறதோ இல்லையோ, பொருள் கொண்டோரால்/பலம்படைத்தோர்/மற்றும் பதவியில் உள்ளோரால் நிறைவேற்றப் பெறும் ஜோடிப்புஇருக்கிறதே, அடேங்கப்பா தற்போதைய முதல்வரின் வளர்ப்பு மகனும் இதில்அடங்குவார் என்ற பரிதாபமான உண்மையை சொல்ல வேண்டிய கட்டாயம் அவசியம்ஆகிறது.

Terroristயாரோ எவருக்கோ ஆபத்து என்றால், வீட்டில் எந்த இடம் பாதுகாப்பாகஇருக்குமோ அந்த இடத்தை தேர்ந்தெடுத்து மறைந்துகொண்டு ஆபத்து நீங்கியதும்வெளியே வந்து துக்கம் விசாரிப்பதில் ஒன்றும் வீரம் இருப்பதாகத் தெரியவில்லை, ஆனால்இன்றைக்கு குப்புசாமிக்கு நேர்ந்தது நாளைக்கு உங்களுக்கோ அல்லது உங்களதுகுடும்பதினருக்கோ நேராது என்பது என்ன நிச்சயம்..........................

துப்பாக்கியையும், அணு குண்டுகளையும் உங்கள் மீது வீசுவது மட்டுமே தீவிரவாதமும்பயங்கிரவாதமும் ஆகாது. உங்களுக்கு ஆக வேண்டிய கடமைகளை மறுப்பதும் கூடதீவிரவாதமே, பயங்கரவாதமே. அரசாங்க இயத்திரம் மக்களுக்காக மக்களாள் நடத்தப்படும் ஒரு அமைப்பு. அதன்செயல்பாடும் திட்டங்களும் மக்களின் நலம் கருதிதான் இருக்கவேண்டுமே தவிர மக்களைஅலைக்கழிக்கவோ அல்லது அவர்கள் கேட்கும் லஞ்சம் இல்லை என்றால் வேலைநடக்காது என்று சண்டித்தனம் செய்வதற்கோ அல்ல.

மக்களளுக்கு அவர்களது தேவைகளை பூர்த்தி செய்யவே இயங்கும் இயந்திரம் அரசு.அப்படி ஒரு பயனை அது அளிக்கவில்லை என்றால் அப்படி ஒரு இயந்திரம் தேவையே இல்லை என்று நினைப்பதில் அர்ததம் இல்லாமல் இல்லை. மேலும் பயந்தவன் பயந்தவனாகவே இருக்கவும், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரணனாக இருப்பதும் நியாயம் இல்லைதான். இதற்கு தீர்வுதான் என்ன, கெட்டவைகளில் இருந்த தன்னை பாதுகாத்துக்கொள்ள பயன்படும் பயம் அதோடு மட்டுமே நிற்கட்டும், அநியாயத்தை தட்டிகேட்கும் தைரியம் அதோடு நிற்கட்டும்.தவறியும், பயப்படுகிறான் என்று ஏவல் ஏசும் நிலைக்கு தைரியமும், அடிப்பான் என்று காலால் இடும் வேலையை தலையால் நிகழ்த்தும் நிலைக்குகெல்லாம் இவை இரண்டும் செல்லாமல், தன்னை பாதுக்காக்கும் செயல் அனைத்து தரப்பு மக்களின் கடமையும் ஆகும். கடமை அறிந்து நடப்போமாக.

- கலைமணி ( kalaimani1@yahoo.com)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: mr_anusiram@yahoo.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X