For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவுக்கு விடை கொடுக்கும் கமலா!

By Staff
Google Oneindia Tamil News

பிரபல மலையாள எழுத்தாளர் கமலா தாஸ் என்ற கமலா சுரய்யா கேரளாவிலிருந்து தனது மகன் வசிக்கும் புனேநகருக்கு இடம் பெயருகிறார்.

Kamala
மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு கவிதைகள், கதைகளை எழுதியுள்ள பிரபல எழுத்தாளர்கமலாசுரய்யா. கமலா தாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா, மாதவிக்குட்டி என்ற பெயரில் மலையாளஇலக்கிய உலகில் தனது படைப்புகளை அரங்கேற்றினார்.

எண்ட கதா (மை ஸ்டோரி) என்ற பெய>ல் வெளியான இவரது வாழ்க்கை சரிதம் பல்வேறு சர்ச்சைகளைக்கிளப்பியது. அதில் ஒளிவுமறைவில்லாமல் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கூறியிருந்தார் கமலா.

1999ம் ஆண்டு திடீரென முஸ்லீமாக மதம் மாறினார் கமலா. தனது பெயரை கமலா சுரய்யா என மாற்றிக்கொண்டார். பர்தா அணிய ஆரம்பித்தார். திடீரென கடந்த ஆண்டு முஸ்லீமாக மாறியதற்காக வருத்தப்படுவதாகதெரிவித்தார் கமலா.

1980ம் ஆண்டு வரை கொல்கத்தாவில் வசித்து வந்த கமலா, பின்னர் 80களின் மத்தியில், கேரளாவுக்கு இடம்பெயர்ந்தார். முதலில் திருவனந்தபுரத்தில் வசித்தார். பின்னர் தனது தாயாரும், கவிஞருமான பாலாமணிஅம்மாவுடன் கொச்சியில் வசிக்க ஆரம்பித்தார்.

புன்னியூர்குளம் என்ற இடத்தில் உள்ள தனது பூர்வீக சொத்தை திருச்சூரைச் சேர்ந்த கேரள சாஹித்ய அகாடமிக்குவழங்குவதாக அறிவித்தார் கமலா. ஆனால் அதுவும் சர்ச்சையைக் கிளப்பியது.

Kamala
பழமைவாத எழுத்தாளர்களுக்கு மத்தியில் புரட்சிகரப் பெண்மணியாக திகழ்பவர் கமலா. தற்போது கமலாவுக்கு70 வயதைத் தாண்டி விட்டது. கொச்சியில் தனியாக வசித்து வரும் கமலா, முதுமை காரணமாக இனியும்தனியாக இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளார்.

எனவே தனது இளைய மகன் ஜெயசூர்யா வசிக்கும் புனேவுக்குச் செல்ல அவர் தீர்மானித்துள்ளார். ஜனவரி 27ம்தேதி கேரளாவை விட்டு புனேவுக்கு அவர் கிளம்புகிறார். தனது இறுதிக் காலம் வரை ஜெயசூர்யாவின்வீட்டிலேயே தங்கப் போவதாக கமலா தெரிவித்துள்ளார்.

கேரளாவை விட்டு கமலா இடம் பெயர்வதைப் போல சர்ச்சைகளும் அவரை விட்டுப் போகுமா என்பதுதெ>யவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X