For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை சங்கமம்

By Staff
Google Oneindia Tamil News


1,300 கலைஞர்கள் பங்கேற்கும், ஒரு வார கால சென்னை சங்கமம் என்ற தமிழ் பண்பாட்டு கலை விழாவை முதல்வர் கருணாநிதி இன்று மாலைதொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளை, பண்பாட்டு சின்னங்களை சென்னை நகர மக்களுக்கு குறிப்பாக மாணவ, மாணவியர், இளைஞர்களுக்குதெரியப்படுத்தும் வகையில் சென்னை சங்கமம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Kanimoli and Sujatha
தமிழக அரசின் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ் மையம் ஆகியவை இணைந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளன. கிராமியக் கலைகள்,நாட்டுப்புறப் பாடல்கள், கர்நாடக இசை, நாடகம் உள்ளிட்டவை இந்த விழாவில் இடம்பெறுகிறது.

சென்னை நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய சாலைகள், கடற்கரைகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட சாதாரணமானஇடங்களில் இந்த கலை விழா நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் வருகிற 26ம் தேதி வரை இந்த ஒரு வார கால பண்பாட்டு கலை விழா நடைபெறுகிறது. இன்று மாலை ஐஐடி திறந்த வெளி அரங்கில்தொடக்க விழா நடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சி குறித்து சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், முதல்வர் கருணாநிதியின் மகளும், கவிஞருமான கனிமொழி, தமிழ்மையத்தின் அமைப்பாளர் ஜெகத் கஸ்பார் ஆகியோர் கூறுகையில், 700 கிராமியக் கலைஞர்கள் உள்பட 1,300 கலைஞர்கள் இதில்பங்கேற்கிறார்கள்.

தொடக்க விழாவில் 200 கலைஞர்கள் பங்கேற்கும் சங்கே முழங்கு என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது ஒரு இயல் இசை, நாடக நிகழ்ச்சியாகும்.இயக்குநர் வசந்த் இதை வடிவமைத்து இயக்கியுள்ளார்.

சங்கப் பாடல்கள் முதல் இன்று உள்ள பாடல்கள் வரை நமது தமிழ் மொழியின் தொன்மை, வளர்ச்சி, பெருமையை விளக்கும் விதமாக இந்தநிகழ்ச்சி அமைந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டு புறநானூறு குறித்த கவிதையை அரங்கேற்றுகிறார்.

இதைத் தொடர்ந்து மக்கள் கூடும் பூங்காக்கள், திரையரங்க வளாகங்கள், கடற்கரைகள் உள்ளிட்ட பொது இடங்களில் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், கரகம், நாதஸ்வரம், நையாண்டி மேளம், காவடியாட்டம் உள்ளிட்ட அனைத்துவகையான கிராமியக் கலைகளும் இதில் இடம் பெறும்.

இதுதவிர நெய்தல் சங்கமம் என்ற நிகழ்ச்சிக்கு மெஙுனா கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஓவியம் வரைதல், டெண்ட்கொட்டகையில் அமர்ந்து படம் பார்த்தல் உள்ளிட்டவை இடம் பெறும். டெண்ட் கொட்டகையில் உட்கார்ந்து படம் பார்ப்பது என்பது சென்னைநகர இளைஞர்களுக்கு சற்றும் தெ>யாத விஷயம். அவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று கூறினர்.

முன்னதாக சென்னை சங்கமம் நிகழ்ச்சி குறித்த பாடல் கேசட் மற்றும் சிடியை எழுத்தாளர் சுஜாதா வெளியிட இயக்குநர் வசந்த் பெற்றுக்கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X