For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சோனியா காந்தி - ஒரு விமர்சனம்- ஜோதிர்லதா கிரிஜா

By Staff
Google Oneindia Tamil News

தேர்தல் அமர்க்களம் முடிந்துவிட்டது. சோனியா காந்தி தமது உள்ளுணர்வின்படி இந்த நாட்டின் பிரதமர் பதவியைத் துறந்துவிட்டார். துறத்தல் (தியாகம்) என்கிற பெருந்தன்மை இந்த நாட்டின் அடிப்படைப் பண்பு. ராமாயணக் கதாநாயகன் ராமன், அவன்தம்பி பரதன், சித்தார்த்த கெளதம புத்தர், மாமன்னர் அசோகன் ஆகியோர் அரசாளும் பதவியைத் துறந்தவர்கள்.

நாம் அறிந்த காந்தியடிகளும் இந்தியா விடுதலையடைந்ததும், எந்தப் பதவியிலும் ஒட்டிக்கொள்ளாமல் சமுதாயச் சேவைசெய்யப் போய்விட்டவர். இந்த மண்ணில் வந்து சில

ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டிருப்பதாலோ என்னவோ, சோனியா காந்தியையும் இந்தப் பெருந்தன்மை பற்றிக்கொண்டது.

யார் என்ன பேசினாலும், எவ்வளவு எதிர்த்தாலும், பிரதமர் பதவியில் அமர்ந்தே தீருவேன் என்று அவர் முடிவு செய்திருந்திருக்கமுடியும். ஆனால், செய்யவில்லை. இந்த அவரது முடிவிலிருந்து பதவி ஆசை அவருக்கு இல்லை என்பதுமெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. பதவி ஆசை இருந்திருப்பின், தான் அரியணையில் அமர்ந்ததன் பிறகு எதிர்க் கட்சியினர்ஆர்ப்பாட்டங்கள் செய்து சில நாளில் அரசைக் கவிழ்க்க முற்படுவார்கள் என்னும் சாத்தியக்கூறு இருப்பினும், அந்தச் சில நாள்வரையிலேனும் பதவியில் அமர்ந்து இந்திய வரலாற்றில் இடம் பெறும் பேரவா அவருக்கு நிச்சயமாய் ஏற்பட்டிருந்திருக்கும்.ஆனால், அவரிடம் அது இல்லை என்பது

தெளிவாகிவிட்டது. அதனாலேயே அவரால் மாபெரும் பதவியைத் துச்சமாய் நினைத்து உதற முடிந்தது.

சோனியா காந்தி எத்தகைய உயர்ந்த ஆன்மா என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்பட்டுவிட்ட உண்மை. தன்பாதுகாவலர்களாலேயே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுடப்பட்ட போது, யே க்யா கர் ரஹே ஹோ? ( என்ன காரியம்செய்யறீங்க? ) என்று கூவியபடி அவர் தரையில் சாய்ந்தார். அம்மா! என்று அலறியவாறு வீட்டினுள்ளிருந்து கணத்துள் ஓடிவந்தசோனியா காந்தி இந்திரா காந்தியைத் தம் மடியில் போட்டுக்கொண்டார் - அடுத்த குண்டு தம் மீது பாய்ந்திருக்க்கூடிய நிலை பற்றியஅச்சமோ கவலையோ இல்லாமல்! பெற்ற மகளே செய்யத் தயங்கி, அஞ்சி, மலைத்துச் செயலிழந்து நின்றிருந்திருக்கக்கூடிய ஓர்ஆபத்தான நேரத்தில், சோனியா காந்தி இவ்வாறு செய்தது அவர் ஓர் உயரிய ஆன்மா என்பதைத் துல்லியமாய் வெளிப்படுத்துகிறது.

இவரது ஆன்மாவின் உயர்வைத் தெள்ளத் தெளிவாக்கும் இன்னொரு விஷயமும் ஞாபகத்துக்கு வருகிறது. ராஜீவ் காந்தியின்படுகொலைச் சதியில் சம்பந்தப்பட்டுச் சிறையிலிருந்த நளினி முருகனை, அவர் சிறையில் இருந்தபோது குழந்தைபெற்றுக்கொண்ட இளந்தாய் என்னும் ஒரே மனிதாபிமனக் கண்ணோட்டத்தோடு சோனியா காந்தி மன்னித்ததுதான் அது!

சோனியா காந்தி பதவியை மறுதலித்துவிடுவார் என்பதே நாம் எதிர்பார்த்தது. மன்மோகன் சிங்கை அவர் பரிந்துரைத்தால்எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற நம் போன்ற நடுநிலையாளர்களின் எண்ணத்தைப் புரிந்துகொள்ளும் உள்ளுணர்வும்அவருக்கு இருந்திருக்கிறது. மிக நல்ல தேர்வு என்று நாடே அவரைப் போற்றிப் பாராட்டுகிறது.

சோனியா காந்தி பிரதமர் பதவியைத் துறந்ததற்குப் பல காரணங்களைப் பலர் சொல்லத்

தொடங்கியுள்ளனர். தீவிரவாதிகளின் கொலைமிரட்டல் அவற்றில் ஒன்று. அதற்கு அஞ்சியவராய் அவர் தோன்றவில்லை. அப்படிஇருந்தால், மக்களோடு மக்களாய்த் தெருக்களில் நடந்து தமது பிரசாரத்தைச் செய்திருந்திருக்க மாட்டார். அடுத்த பிரதமர் அவரேஎன்பது அறிவிக்கப்படாத தீர்மானம் என்பது தெரிந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தின் போதே அவரது உயிருக்கு ஆபத்துஇருக்கத்தான் செய்தது.

அவர் இத்தாலியர் என்பது அடுத்த அம்பு. இது ஒன்றை மட்டுமே வைத்துத் தம் அரசைச் சில நாளில் எதிர்க்கட்சியினர்கவிழ்ப்பார்கள் என்பது இவருக்குத் தெரியும். எனவே இரண்டோர் ஆண்டுகளில் மறுபடியும் ஒரு பொதுத்தேர்தல் வரும் என்பதும்இவர் அறிந்ததுதான். அதற்கு இடம் கொடுத்துப் பொருளாதாரச் சீர்குலைவுக்கு வழி வகுக்க அவர் விரும்பாததும் ஒரு காரணமாகஇருந்திருக்க வேண்டும்.

சுஷ்மா சிவராஜ் எடுத்த (அசட்டுத்தனமான) மொட்டையடித்துக்கொண்டு, பத்தியச் சாப்பாடு சாப்பிட்டுத் தரையில் படுத்துறங்கும்முடிவு அவரை அருவருப்பில் நிச்சயமாக ஆழ்த்தியிருந்திருக்கும். (இந்தியாவில் இன்று லட்சக்கணக்கானோர் வெறுந்தரையில்தானே படுத்து உறங்குகிறார்கள்? ஒரு வேளைக்கான எளிய சாப்பாடும் கிடைக்காதவர்கள்தானே அவர்கள்! பாராளுமன்றஉறுப்பினர் ஆனதுமே, சுஷ்மா சிவராஜ் இப்படி ஓர் அறிவிப்பைச்

செய்திருந்தால், ஒரு (பெண்) காந்தி என்று அவரைக் கொண்டாடியிருக்கலாம். இப்போது சொல்லுவது விதண்டாவாதமல்லவா?சந்தர்ப்பவாதமல்லவா?)

இப்படி ஒரு சூழ்நிலையில், அப்படியாவது நாம் பிரதமர் ஆகாவிட்டால்தான் என்ன என்னும் கேள்வி இவருள்கிளம்பியிருந்திருக்கும்.

இந்தக் காரணங்களையெல்லாம் மீறி, எவருமே சில நாளேனும் பிரதமர் பதவியில் இருந்து இந்திய

வரலாற்றிலும் இடம் பெறவே ஆசைப்பட்டிருப்பார்கள். ஆனால் தேடி வந்த பதவியைத் துறந்ததன் வாயிலாக, சோனியா காந்திஅதற்கும் மேம்பட்ட வரலாற்றுச் சிறப்பை எய்திவிட்டார் என்பதில் துளியும் ஐயமில்லை!

நிலையான ஆட்சி தரும் அறுதிப் பெரும்பான்மை பெற்ற மாபெரும் கட்சியாகக் காங்கிரஸ் கட்சியை உருவாக்கும் பணியில்சோனியா காந்தி வெற்றி பெற வாழ்த்துவோம்!

- ஜோதிர்லதா கிரிஜா([email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X