For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் ரத்தக் கண்ணீர்!

By Staff
Google Oneindia Tamil News


எம்.ஆர்.ராதாவின் மிரட்டல் நடிப்பில் சக்கை போடு போட்ட ரத்தக் கண்ணீர் நாடகம், 7 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சென்னையில்நடக்கவுள்ளது.

திருவாரூர் தங்கராசுவின் கதை, வசனத்தில் உருவான நாடகம்தான் ரத்தக் கண்ணீர். 1946ம் ஆண்டு முதல் முறையாக அரங்கேறியது.எம்.ஆர்.ராதாவின் மிரட்டல் நடிப்பைப் பார்த்து பலரும் பிரமித்துப் பாராட்டிய நாடகம் இது.

MR Radha with Sivaji
இந்த நாடகத்தை பட்டிதொட்டியெங்கும் போட்டு கலக்கினார் ராதா. கடைசியாக 1979ம் ஆண்டு இதில் அவர் நடித்தார். அவருடைய மறைவுக்குப்பின்னர் 1980 முதல் 1999ம் ஆண்டு வரை ராதாவின் மகனும், நடிகருமான ராதாரவி இந்த நாடகத்தை நடத்தி வந்தார்.

கிட்டத்தட்ட 10 ஆயிரம் முறைக்கு மேல் மேடையேறியுள்ளது ரத்தக் கண்ணீர் நாடகம். கடந்த 7 ஆண்டுகளாக இந்த நாடகம் அரங்கேறாமல்இருந்து வந்தது.

Radharavi
இந்த நிலையில் ராதாவின் 100வது பிறந்த நாளையொட்டி ரத்தக்கண்ணீர் நாடகம் மீண்டும் மேடை ஏறுகிறது. ராதாரவியே இந்த நாடகத்தைஅரங்கேற்றுகிறார்.

ராஜா அண்ணாமலை மன்றத்தில் 21ம் தேதி மாலை 6 மணிக்கு ரத்தக்கண்ணீர் நாடகம் மீண்டும் போடப்படுகிறது. இளங்கோ கலை மன்றம்இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இயக்குநர், நடிகர் எஸ்.ஜே. சூர்யா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். கலைப்புலி தாணு முன்னிலை வகிக்கிறார். ராதாரவியுடன், நடிகை பிரகதி(காந்தா வேடத்தில் இவர் நடிக்கிறார்), நடிகர்கள் கே.ஆர்.செல்வராஜ், நம்பிராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X