For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ் மக்களுக்கு பணிவான வேண்டுகோள்

By Staff
Google Oneindia Tamil News

பெருமைக்குரிய நமது குடியரசுத் தலைவர் அவர்களும் தமிழ்நாட்டின் முன்னாள் இன்னாள் முதலமைச்சர்களும் மற்றும் அறிஞர்பெருமக்களும் தமிழில் கையொப்பம் இடுகிறபோது தம் பெற்றோரின் (தாய்/தந்தை) பெயரிலுள்ள முதலெழுத்தைமுன்னெழுத்தாக தமிழில் போடுவார்களேயன்றி A.P.J என்றோ, J.J. என்றோ போடுவதில்லை.

உலக மாநாடுகளில் உலகத் தலைவர்கள் ஆங்கிலம் அறிந்திருந்தும் தம் தாய்மொழியிலேயே உரைநிகழ்த்துகின்றனர். எம்மொழி ஆவணங்களிலும் தாய் மொழியிலேயே கையொப்பமிடுகின்றனர் (சான்று: முன்னாள்பிரதமர் வாஜ்பாய்).

எனவே எந்த மொழியிலான செய்தி, அறிக்கை படிவம் ஆயினும் தாய்மொழியில் நிறைவு செய்வது,கையொப்பமிடுவது தவறே இல்லை. வங்கியில் ஒப்பமாட்டார்கள் என்ற அச்சம் வேண்டாம். முன்பே உள்ளமாதிரிக் கையொப்பத்தை மாற்றி இன்று முதல் தமிழில் கையொப்பம் போட்டு வரவும்.

பண்டைத் தமிழர்கள் ஊர்ப்பெயரையும், தந்தை பெயரையும் முழுமையாக எழுதினர். மறைந்த தமிழறிஞர்,தலைவர்கள் எல்லாரும் தமிழிலேயே கையொப்பமிட்டனர். திரைத்துறை கீழ்களாகலேயே ஆங்கில முன்னெழுத்துமோகம் தொடங்கியது. தமிழால் வளர்ந்த சில அரசியல் கயவர்களும் துணை போயினர்.

தமிழர்களாகிய நாம் சரியான பாதையைப் பின்பற்றி முன்னெழுத்தையும் தமிழில் போட்டுக் கையெழுத்திடுவதேமுறையாகும். முன்னெழுத்தை ஆங்கிலத்திலும், கையெழுத்தை தமிழிலும் கலப்படம் செய்து கையொப்பமிடும்வழக்கத்தைக் கைவிடவேண்டும்.

பிற மொழியினர் அவ்வாறு எழுதுவதேயில்லை. ஓர் ஆங்கிலேயேர் தனது பெயரின் முன்னெழுத்தை பிரெஞ்ச்மொழியிலோ, ஒரு ஜப்பானியர் தனது முன்னெழுத்தை சீனத்திலோ எழுதுவதில்லை. நாம் மட்டும் பூமாலை மகன்முத்து என்பதை (ப்பீ)P. முத்து என்று எழுதலாமா? ஆங்கிலேயர் போன பின்னும் நாம் அவர் மொழிக்குஅடிமையா? என்று சிந்திக்கவும்.

பெற்றோரின் தமிழ்ப் பெயரை ஆங்கிலத்துக்கு மாற்றி அதன் முதலெழுத்தை எடுத்து தம் பெயருக்கு முன்னிடுவதுமிகவும் இழிவானது. ஆங்கிலமே அறிந்திராத பெற்றோரையும் ஆங்கிலேயராக்குவதா? தாத்தா, பாட்டி பெயர்சொல்பவரே பெயரன், பெயர்த்தி. நம் முன்னோர்களின் பெயரை நம் மொழியில் எழுதுவதும், விளிப்பதுமேநமக்குப் பெருமை.

ஆங்கிலத்தில் K என்ற ஓரெழுத்திற்கு தமிழில் க முதல் க் வரை 13 எழுத்துக்கள் உள்ளன. கு.முத்து என்றால் குப்பன்,குமரன் என்று ஒல்லும் வகைக் கருத வாய்ப்புள்ளது. K. முத்து என்றால் அப்படிக் கருதவியலாது. தலித் தலைவர்திருமாவளவன் பெற்றோர் பெயரையும் தமிழ்ப் பெயராக மாற்றியுள்ளார். நீவிர் பெற்றோரை ஆங்கிலேயர் ஆக்கிஇழிவு தேடலாமா? சிந்திப்பீர்.

1.தமிழில் கையொப்பமிடுவீர்!

2.முன்னெழுத்தை தமிழில் குறிப்பீர்!

3.தமிழில் (முடிந்தளவு) பேசுவீர்! எழுதுவீர்!

4.எம்மொழிப் படிவம் ஆயினும் தமிழில் நிறைவு செய்து கையொப்பமிடுவீர்!

நமையன்றி யார் துடைப்பார் நம் இழிவை

நமையன்றி யார் துடைப்பார் நம் பகையை.

இங்ஙனம்,
இளந்தமிழர்க் கழகம்,
நயனார்பாளையம்-606301,
விழுப்புரம் மாவட்டம்.

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X