For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி துறந்த தலைமுடி: வைரமுத்து

By Staff
Google Oneindia Tamil News


வயதாகி விடுவதை தலை முடி காட்டிக் கொடுத்து விடும். காட்டிக் கொடுக்கிறது என்பதால்தான் அதை கலைஞர்வைத்துக் கொள்ளவில்லை. கட்சியிலும் வைத்துக் கொள்ளவில்லை என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.

மதுரை வந்த கருணாநிதி திருப்பரங்குன்றத்தில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் பொன் விழாவில்கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இயந்திர மின்னணுவியல் கட்டடத்தை கருணாநிதிதிறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பேசி வருவதாலும், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருவதாலும் எனது தொண்டை சரியாக ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. தொண்டைதான்ஒத்துழைக்கவில்லையே தவிர தொண்டு நிற்கப் போவதில்லை.

இக்கல்லூரியை உருவாக்கிய தியாகராஜ செட்டியார், தமிழ் மீது பற்றுக் கொண்டவர். தமிழக மொழிப் போராட்டவரலாற்றில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்தி ஆதிக்க எதிர்ப்பை எந்த அளவுக்கு கையாண்டார் என்பதைநான் அறிவேன்.

மொழிப் பிரச்சினையில் சிக்கியவர்கள், சீரழிந்தவர்களுக்கு கை கொடுக்க முன்வந்தவர் தியாகராஜ செட்டியார்.தமிழ்நாடு ஏட்டில் அருமையான தமிழ்ச் சொற்களைக் கையாண்டவர் அவர். தமிழுக்கு தீங்கு வந்தால் பொங்கிஎழுந்திடுவார். தமிழை வளர்த்தார்.

அண்மையில் சோனியா காந்தியின் பாதுகாப்பு குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. தனக்கு வந்த பிரதமர்பதவியைக் கூட வேண்டாம் என நிராகரித்தவர் சோனியா காந்தி. அப்போது நான் சோனியாவுக்கு கடிதம்எழுதினேன். அதில் பாதுகாப்பு மிக மோசமான அளவுக்கு இருக்கிறது, இதை அலட்சியப்படுத்தக் கூடாது எனக்குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கு சோனியா எழுதிய பதில் கடிதத்தில், ரிஸ்க் எடுக்கக் கூடாது. அதேசமயத்தில், பயத்திலும் வாழக் கூடாதுஎன்று கூறியிருந்தார்.

இங்கே எல்லோரும் என்னை ரோல்மாடலாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறினார்.மாணவர்கள் அப்படி செய்து கொள்ளலாம், ஆனால் மாணவிகள் சோனியா காந்தியை ரோல் மாடலாக வ>த்துக்கொள்ள வேண்டும் என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்துவின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. அவர் பேசுகையில்,மனிதனின் வயதை ஆண்டுகள் நிர்ணயிக்கின்றன. மாட்டின் வயதை பற்கள் நிர்ணயிக்கின்றன. தமிழின் வயதைஅறிய கலைஞர் எழுதிய புத்தகம் எனலாம்.

அவர் 23 வயதிலும் எழுதினார். 83 வயதிலும் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போதிருந்த அதே வீரம், அதேகாரம் இப்போதும் இருக்கிறது. கற்பனை வளம் குறையவே இல்லை. அவரது நேரக் கட்டுப்பாடு அனைவரையும்திகைக்க வைக்கிறது.

மனிதனுக்கு வயதாகி விட்டால் தலை முடி காட்டிக் கொடுத்து விடும். காட்டிக் கொடுத்து விடும் என்பதால்தான்அவர் அதை வைத்துக் கொள்ளதில்லை. கட்சியிலும் வைத்துக் கொள்வதில்லை (இப்படிச் சொன்னபோது பலத்தகரகோஷம்).

இன்னும் 20 ஆண்டுகள் தமிழ்ப் பணி தொடரும் என்று கலைஞர் கூறியிருக்கிறார். இதுவரை உங்களதுஜாதகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது அவர்களது ஜாதகத்தை பார்க்க ஆரம்பித்து விட்டனர்என்றார் வைரமுத்து.

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, சாத்தூர் ராமச்சந்திரன்,தங்கம் தென்னரசு, தமிழரசி, மதுரை ஆட்சித் தலைவர் உதயச்சந்திரன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில்பங்கேற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X