• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சல்மான் ருஷ்டி புத்தகத்துக்கு விருது

By Staff
Google Oneindia Tamil News
Rushdie
லண்டன்: சல்மான் ருஷ்டி எழுதிய மிட்நைட் சில்ரன் என்ற புத்தகம் உலக அளவில் அதிக வாக்குகளைப் பெற்று சிறந்த புத்தகத்துக்கான விருதைப் பெற உள்ளது.

உலக அளவில் உள்ள வாசகர்களின் வாக்குகளின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்தப் போட்டிக்களத்தில் உள்ள பிற போட்டியாளர்களை விட சல்மான் ருஷ்டி அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.

இந்து விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் எழுத்தாளர் வரும் 10-ம் தேதி முறைப்படி லண்டனில் அறிவிக்கப்படுவார்.

61 வயதாகும் சல்மான் ருஷ்டி இந்தியாவில் பிறந்தவர். சாத்தானின் கவிதைகள் என்ற அவரது நூல் முஸ்லிம் மதத்தை இழிவாகச் சித்திரிக்கிறது என்று கூறி உலகம் முழுவதும் அவருக்குப் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா கோமினி, சல்மானுக்கு மரணதண்டனை அறிவித்தார்.

அதே நேரத்தில் அவரது இலக்கியப் பணிகளை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் பாராட்டி, கௌரவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X