For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் நம்பர்-1 பணக்கார மன்னர் பூமிபோல்

By Staff
Google Oneindia Tamil News

Bhoomipol with wife
துபாய்: உலகின் பணக்கார ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜும், 2வது இடத்தை ஐக்கிய அரபு நாடுகளின் மன்னரும் பிடித்துள்ளனர்.

உலகின் பணக்கார ராஜகுடும்ப பட்டியலை வெளியிட்டுள்ளது போர்பெஸ் இதழ். இதில் 36 லட்சம் கோடி டாலர் மதிப்பு சொத்துக்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார் தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ்.

இரண்டாவது இடத்தில் 24 லட்சம் கோடி டாலர் சொத்துக்களுடன் ஐக்கிய அரபு நாடுகளின் அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் கலிபாபின் சையது அல்நஹ்யான் பிடித்துள்ளார். சவுதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் 21 லட்சம் கோடி டாலருடன் 3வது இடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு முதல் இடத்தை பிடித்த புருனேயைச் சேர்ந்த சுல்தான் இந்தாண்டு 20 லட்சம் கோடி டாலருடன் 4வது இடத்துக்கு கீழிறங்கியுள்ளார். 5வது இடத்தை பிடித்துள்ளார் துபாய் துணை அதிபரும் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷித்அல் மக்டோம். இவரது சொத்து மதிப்பு 18 லட்சம் கோடி டாலர்.

கத்தார் மன்னர் ஷேக் ஹமத்பின் கலிபா அல்தானி 7வது இடத்திலும், ஓமன் மன்னர் சுல்தான் கப்பூஸ்பின் 10வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத் 12வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பணக்கார மன்னர்களின் மொத்த சொத்து 128 லட்சம் கோடி டாலர்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X