For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்பாம் மெயில்கள் அனுப்புவதில் ஆசியாவில் இந்தியா நம்பர் ஒன்!

By Staff
Google Oneindia Tamil News

Spam mail
பெங்களுரு: ஆசியாவிலேயே தேவையற்ற இமெயில் (ஸ்பாம்) அனுப்புவதில் இந்தியாதான் முதலிடம் வகிப்பதாக டிரென்ட் மைக்ரோ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் இந்தியாவுக்கு இதில் ஏழாவது இடமாம்!

இந்த ஆய்விலிருந்து கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:

அதிக தேவையற்ற இமெயில் அனுப்புவதில் முதலாவதாக உள்ளது, ரஷ்ய கூட்டமைப்பு நாடுகள்தான். உலகின் ஸ்பாம் மெயிலில் ரஷ்யாவின் பங்கு 11% அடுத்து அமெரிக்காவில் 9.36% இந்தியாவில் 4.26% தேவையற்ற இமெயில்கள் அனுப்பப்படுகின்றன.

உலகின் வளர்ச்சி அடைந்த 10 நாடுகளில் மட்டும் 57.4% தேவையற்ற மெயில் உருவாக்கப்படுகின்றன. 6.65 கோடி ஸ்பாம் மெயில்கள் இந்தியாவிலிருந்து மட்டும் அனுப்பப்படுகின்றன.

பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் மட்டுமே உலகின் 20% ஸ்பாம் மெயில்கள் உருவாகின்றனவாம். இதில் ஆசிய கண்டத்தில் மட்டும் 16.57%.

இப்படி வெட்டி மெயில்கள் அனுப்பி மக்களை ஏமாற்றும் நேரத்தை உருப்படியாகச் செலவழித்தால் நியாயமான முறையிலேயே நல்ல லாபம் பார்க்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'பாமரத்தனமாக' கூட இருக்கலாம். ஆனால் 'ஸ்பாமரத்தனமாக' இருப்பதால் யாருக்கு என்ன லாபம்?

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X