For Daily Alerts
Just In
காயல்பட்டணத்தில் முஸ்லிம் லீக் நூற்றாண்டு வரலாற்று நூல் வெளியீடு
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் இன்று நடைபெறும் முஸ்லிம் லீக் பொதுக் குழுவையொட்டி முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் எழுத்தரசு ஏ. எம். ஹனீஃப் எழுதியுள்ள முஸ்லிம் லீக் வரலாறு முதற்பாகம் வெளியிடப்படுகிறது.
முஸ்லிம் லீக் பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்படும் இந்நூலினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி வெளியிடுவார்.
முதல் பிரதியினை இலங்கையின் துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சரும், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூஃப் ஹக்கிம் பெற்றுக் கொள்வார்.
இத்தகவலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையச் செயலாளர் காயல் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தெரிவித்தார்.
Comments
Story first published: Saturday, December 27, 2008, 16:57 [IST]