For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அபுதாபி ம‌க‌ளிர் வ‌ட்ட‌ ஏழாவ‌து ஆண்டு விழா

By Staff
Google Oneindia Tamil News

அபுதாபி ம‌க‌ளிர் வ‌ட்ட‌ ஏழாவ‌து ஆண்டு விழாவினையொட்டி துபாய் அல் நூர் சிற‌ப்புக் குழ‌ந்தைக‌ள் ப‌யிற்சி மைய‌த்திற்கு ம‌னித‌நேய‌ உத‌வி வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி, ஏழு ஸ்வ‌ர‌ங்க‌ள் இசை ம‌ற்றும் க‌ண்க‌வ‌ர் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சி வ‌ரும் ஜ‌ன‌வ‌ரி 23ம் தேதி மாலை அபுதாபி நேஷ‌ன‌ல் தியேட்ட‌ரில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

த‌மிழக‌த்தின் பிர‌ப‌ல‌ பின்ன‌ணி பாட‌க‌ர்க‌ள் மால‌தி ல‌க்ஷ்ம‌ன் ம‌ற்றும் மாணிக்க‌ விநாய‌க‌ம் ஆகியோர் க‌ல‌க்கும் ஏழு ஸ்வ‌ர‌ங்க‌ள் இசைநிக‌ழ்ச்சியும், ச‌ன் டிவி காமெடி புக‌ழ் ஈரோடு ம‌கேஷ் ம‌ற்றும் ரோபோ ச‌ங்க‌ர் ஆகியோரின் க‌ல‌க்க‌ல் காமெடி நிக‌ழ்ச்சியும் ந‌டைபெறும்.

அமீர‌க‌த்தில் ப‌யின்று வ‌ரும் ப‌ள்ளி மாண‌வ‌, மாண‌விய‌ர் ப‌ங்கேற்கும் க‌ண்க‌வ‌ர் ந‌ட‌ன‌ நிக‌ழ்ச்சிக‌ள் ந‌டைபெறும்.

இந்நிக‌ழ்ச்சிக்கான‌ அனும‌திச் சீட்டுக‌ளை அபுதாபி செட்டிநாடு ஹோட்ட‌ல், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், வ‌ச‌ந்தா ஹோட்ட‌ல், முஸ‌ப்பா ச‌வுத் இந்திய‌ன் உண‌வ‌க‌ம், ட‌ரின் த‌மிழ‌க‌ உண‌வ‌க‌ம், யாபா உண‌வ‌க‌ம், மேரிட் உண‌வ‌க‌ம் ஆகிய‌வ‌ற்றில் கிடைக்கும்.

மேலும் இந்நிக‌ழ்ச்சி குறித்து விப‌ர‌ம‌றிய‌ 050 988 4737 / 050 492 7574 ஆகிய‌ எண்க‌ளைத் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

இவ்வ‌மைப்பின் இணையத்த‌ள‌ முக‌வ‌ரி: http://www.tamilladiescircle.com

த‌க‌வ‌ல் : மீனா வெங்கடேஷ், நிறுவ‌ன‌ த‌லைவ‌ர்,அபுதாபி ம‌க‌ளிர் வ‌ட்ட‌ம்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X