For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்த்ராயன் திட்ட இயக்குநர் அண்ணாதுரைக்கு கெளரவ டாக்டர் பட்டம்

By Sridhar L
Google Oneindia Tamil News

Annadurai
சென்னை: சந்த்ராயன்-1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரைக்கு சென்னை பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. அதேபோல, எலும்பு முறிவு டாக்டர் மயில்வாகனன் நடராஜனுக்கும் கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கப்படுகிறது.

150வது ஆண்டை கொண்டாடி வரும் சென்னை பல்கலைக்கழகம், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கடந்த ஆண்டு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

இந்த ஆண்டு, இந்திய விண்கலம் சந்திரனில் காலடி பதிக்க மூலகாரணமாக இருந்த சந்த்ரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, எலும்புமுறிவு டாக்டர் மயில்வாகனன் நடராஜன் ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்தது.

துணைவேந்தர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்த சிறப்பு செனட் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.

வருகிற 19ம் தேதி நடைபெறும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அண்ணாதுரை, டாக்டர் மயில்வாகனன் நடராஜன் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான சுர்ஜீத் சிங் பர்னாலா தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் உத்தரப் பிரதேச கவர்னர் டி.வி.ராஜேஸ்வர் கலந்துகொள்கிறார்.

பட்டமளிப்பு விழாவில் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பட்டம் பெறுகிறார்கள். பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற 180 பேருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. ஆராய்ச்சி பணிக்காக 300 பேர் பி.எச்டி. பட்டம் பெறுகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X