For Daily Alerts
Just In
மயில்சாமி அண்ணாதுரைக்கு புதுவை பல்கலை டாக்டர் பட்டம்

புதுவை பல்கலைக்கழகத்தின் 19வது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கு புதுவை பல்கலைக்கழகத் துணை வேந்தர் தரீன் தலைமை தாங்குகிறார்.
விழாவில் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, யுனெஸ்கோவின் நல்லெண்ணத் தூதர் மதன்ஜித் சிங் ஆகியோருக்கு எழுத்து துறையில் சேவை புரிந்தமைக்காக கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
மேலும் சந்த்ரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரைக்கு அறிவியல் துறைக்கான கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.