For Daily Alerts
Just In
அபுதாபியில் வெளிநாடுவாழ் இந்தியர் ஓட்டுரிமை கருத்தரங்கு
EIFF என்றழைக்கப்படும் ''அமீரக இந்தியா சகோதரத்துவப் பேரவை'' (Emirates India Fraternity Forum) வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டங்களாக பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக அமீரகம் முழுவதும் EIFF பல கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
வரும் 9ம் தேதி இரவு 8 மணிக்கு அபுதாபி ஏர்லைன்ஸ் ஹோட்டலில் (Behind Green House Building) முதல் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் ஜனநாயகத்தின் முக்கிய தூணாகிய ஓட்டுரிமையை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பெற்றுத் தந்திட ஒன்றிணைவோம் என அந்தப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
Comments
ஓட்டு தேர்தல் இந்தியர்கள் அபுதாபி voting வாக்கு வெளிநாடு என்ஆர்ஐ election 2009 emirates nri forum seek rights ஓட்டுரிமை
Story first published: Thursday, May 7, 2009, 12:06 [IST]