For Quick Alerts
For Daily Alerts
ஜூலை 22ல் சூரிய கிரகணம்-பழனி கோயில் முடல்!
பழனி: சூரிய கிரகணத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவில் ஜூலை 22ம் தேதி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 22ம் தேதி காலை 5.28 மணி முதல் 7.18 மணி வரை சூரிய கிரகணம் காலகட்டத்தில் மலைக் கோவில் சன்னதி வரை மூடப்படும்.
சூரிய கிரகணத்துக்கு பின் மலைக்கோவில் பிரகாரங்கள் கழுவி சுத்தம் செய்யப்பட்டு கைலாசநாதர் கோவிலில் கும்பம் வைத்து பரிகார ஹோமம் நடைபெறும்.
அதன் பின்பு கும்பம் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் செய்த பின்பு காலை 7.30 மணிக்கு சன்னதி திறக்கப்படும்.
அதைத் தொடர்ந்து விஸ்வரூப தரிசனம் நடைபெறும். பின்பு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.