For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேல்மருவத்தூர் ஆடிப்பூரம்: 23ல் தொடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 38ம் ஆண்டு ஆடிப்பூர பெருவிழா வரும் 23, 24, 25 ஆகிய நாட்களில் நடக்கிறது.

23ம் தேதி காலை 3 மணிக்கு மங்கல இசையுடன் விழா தொடங்குகிறது. காலை 4 மணிக்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறும். காலை 8.30 மணிக்கு சித்தர் பீடத்தின் பங்காரு அடிகளாருக்கு வரவேற்பும், பாத பூஜையும் நடைபெறும். மாலை 5 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூஜையை லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைக்கிறார்.

24ம் தேதி காலை 8 மணிக்கு செவ்வாடை பக்தர்கள் கொண்டு வரும் கஞ்சியை வரவேற்பதும் அதைத் தொடர்ந்து கஞ்சி வார்த்தலும் நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். பகல் 1 மணிக்கு சுயம்பு அன்னைக்கு பால் அபிஷேகம் நடக்கும்.

25ம் தேதி காலை 6 மணிக்கு பங்காரு அடிகளாருக்கு வரவேற்பும், பாத பூஜையும் நடைபெறும். பின்நர் அன்னதானம் வழங்கப்படும். மாலை 6 மணிக்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X