For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் சந்தோஷமான நாடுகள்!

By Staff
Google Oneindia Tamil News

Costa Rica
உலகில் மக்கள் சந்தோஷமாக, நீண்ட ஆயுளுடன் வாழ ஏற்ற நாடு எது? இதைக் கண்டுபிடிக்க சந்தோஷமான பூமி என ஒரு புதிய பட்டியலைத் தயாரித்துள்ளனர். அதன்படி 143 நாடுகளைப் பட்டியலிட்டு அதில் மக்கள் சந்தோஷமாக வாழத் தகுந்த நாடு என சிலவற்றைப் பரிந்துரைத்துள்ளனர்.

1. கோஸ்டா ரிகா

இங்குதான் மக்கள் அதிகபட்ச சந்தோஷம், நிமதியான வாழ்க்கை மற்றும் அதிக ஆயுளுடன் வசிப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள இதன் தலைநகர் சான் ஜோஸ்.

2. டொமினிக்கன் குடியரசு

உலகில் மக்கள் அதிக சந்தோஷத்துடன் வாழும் இரண்டாவது நாடு டொமினிக்கன் குடியரசு. கரீபிய தீவுக்கூட்டங்களைச் சேர்ந்தது. தலைநகர் சாண்டோ டொமினிகா.

3.ஜமைக்கா

இன்னமும் பிரிட்டிஷ் அரசியின் தலமையில் இயங்கும் நாடுகளில் ஒன்று ஜமைக்கா. உலகில் அமெரிக்கா, கனடாவுக்கு அடுத்து ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் உள்ள நாடு. மக்கள் மிகுந்த சந்தோஷமாகவும், பிரச்சினைகள் பெரிதாக இல்லாமலும் வாழ்கிறார்களாம். தலைநகர் கிங்ஸ்டன். பொழுதுபோக்கு, பீன்பிடிப்பது, குடிப்பது, கிரிக்கெட் பார்ப்பது!

4.கவுதிமாலா

இது ஒரு மத்திய அமெரிக்க நாடு. தலைநகர் கவுதிமாலா சிட்டியைத் தவிர, பிற பகுதிகளில் பெரிதாக போக்குவரத்து வசதிகள் கூட கிடையாது. ஆனால் மக்கள் நீண்ட ஆயுள் மற்றும் நிம்மதியுடன் வாழ்கிறார்களாம்.

5.வியட்நாம்

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட 13 வது நாடு. ஆசியாவின் முக்கிய நாடுகளுள் ஒன்று. பெயரளவுக்கு கம்யூனிஸ நாடாக இருந்தாலும், இன்றைக்கு ஆசிய அளவில் திறந்தவெளிச் சந்தைக் கொள்கையை கடைப்பிடிக்கும் நாடு இதுதான்.

விவசாயம்தான் மெயின்... அதனால் நல்ல சாப்பாடு, தரமான உணவுப்பொருட்கள், நிமதியான வாழ்க்கை என மக்கள் நிதானத்துடன் இருக்கிறாகள்.

6. கொலம்பியா

லத்தீன் அமெரிக்க நாடுகளுள் ஒன்று. கொலம்பஸ் கண்டுபிடித்த நாடுகளில் ஒன்றான இங்கு சர்வதேச சந்தைப் பொருளாதாரம் எவ்வளவுதான் சுரண்டினாலும், நிம்மதியும் சந்தோஷமும் இன்னும் மக்களை விட்டுப் போகவில்லையாம். இதன் தலைநகர் பகோடா.

7.க்யூபா

உண்மையிலேயே உலகை ஆச்சரியப்பட வைத்துள்ள நாடு இது. எத்தனையோ சிக்கல்கள், தடைகள் இருந்தாலும், முன்பு புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ, இப்போது அவர் தம்பி ரவுல் காஸ்ட்ரோ தலைமையில் வெற்றிநடைபோடும் நாடு இது.

இந்நாட்டு மக்களின் சராசரி வயது 78.3 ஆண்டுகள். உலகிலேயே அருமையான மருத்துவ வசதிகள் நிறைந்த நாடு. தலைநகர் ஹவானா.

8. எல் சால்வடார்

மத்திய அமெரிக்காவில் உள்ள இந்த நாடு, அப்பகுதியின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளுள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

நிச்சயம் இந்நாட்டு மக்கள் நிம்மதியாகத்தான் இருப்பார்கள். காரணம் உலகிலேயே அதிக வரிகள் இல்லாத ஒரே நாடு எல் சால்வடார்தான். தலை நகர் சான் சால்வடார்.

9. பிரேஸில்

ஜி 20 அமைப்பின் முக்கிய அங்கம். உலகின் பெரிய நாடுகளுள் ஒன்று. எல்லா வளங்களும் நிறைந்த மிகச் சிறந்த நாடான பிரேஸில், உலக அளவில் 10வது சக்தி வாய்ந்த பொருளாதாரமாகத் திகழ்கிறது. தலைநகர்: ரியோடி ஜெனிரோ

10. ஹோண்டுராஸ்

மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த நாடுதான் இதுவும். நாளுக்கு நாள் இதன் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. பேராசை கொள்ளாத, குற்றங்கள் செய்யாத மக்கள் என்பதால் இந்த டாப் டென்னில் அமெரிக்காவுக்குக் கூட கிடைக்காத இடம் ஹோண்டுராஜுக்குக் கிடைத்துள்ளது. தலைநகர்: டெகுசிகல்பா

இந்த முதல் பத்து சந்தோஷமான, நிம்மதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவோ உலக வல்லரசுகள் எனப்படும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவோ இல்லை!.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X