For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் ரத்ததான முகாம்

By Staff
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் இந்திய சமூக நல கமிட்டி மற்றும் அல் வாஸல் மருத்துவமனை ஆதரவுடன் இந்திய கன்சுலேட்டில் ஆகஸ்ட் 5 புதன்கிழமை காலை காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெறுகிறது.

இதன் மூலம் சேகரிக்கப்படும் ரத்தம் தலசீமியா எனும் குறைபாடால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வொரு மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவதற்கும், மேலும் அறுவை சிகிச்சை மற்றும் விபத்து கால சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்படும்.

இத்தகைய மனிதாபிமான பணிகளுக்கு பயன்படும் ரத்தத்தை மனிதாபிமான அடிப்படையில் ரத்ததானம் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஈமான் அமைப்பு இந்திய சமூக நல கமிட்டியின் நிறுவன உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரங்களுக்கு: முகம்மத் தாஹாவை 050 467 43 99 / 050 25 33 712 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

உர்தூ மொழி கவியரங்கம்:

துபாயில் ஹமாரி அசோஷியேஷன் சார்பில் சிறப்பு உர்தூ மொழி கவியரங்கம் துபாய் இந்திய உயர்நிலைப்பள்ளி ஷேக் ராஷித் கலையரங்கில் ஆகஸ்ட் 6 வியாழக்கிழமை மாலை 8.30 மணியளவில் நடைபெற இருக்கிறது.

இக்கவியரங்கிற்கு அமீரகத்துக்கான இந்திய தூதர் தல்மிஷ் அஹ்மத், இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி, இந்திய குடியரசுத் தலைவரின் உதவிச் செயலாளர் பைஷ் அஹ்மத் கித்வாய் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

இக்கவியரங்கில் ஹஸன் கமால், நிதா பஷ்லி, வஸீம் பரேல்வி, டாக்டர் சரிதா சர்மா, மிராஜ் பைஸாபாத்தி, முனவர் ரானா, டாக்டர் குமார் பச்செய்ன், பிரமோத் திவாரி உள்ளிட்ட பல முன்னணி கவிஞர்கள் கவிதை படிக்க உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X