For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்னிந்தியாவில் புற்றுநோய் அதிகரிப்பு-டாக்டர்கள் கருத்தரங்கில் தகவல்

By Staff
Google Oneindia Tamil News

Cancer cells
கன்னியாகுமரி: தென்னிந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோயால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு புதுச்சேரி மாநில அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு தொடர்பான தொடர் கல்வி கருத்தரங்கு கன்னியாகுமரியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. மாநாட்டை கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் பரமசிவம் தொடங்கி வைத்தார்.

இந்திய அறுவை சிகிச்சை நிபுணர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தேசிய அளவில் பி.சி.ராய் விருது பெற்றவருமான டாக்டர் பழனிவேல் பேசுகையில்,

தென்னிந்தியாவில் இரப்பை, மலக்குடல், உணவு குழாய், கல்லீரல், கணையம் போன்றவற்றில் தான் அதிக அளவில் புற்று நோய் ஏற்படுகிறது. இதற்கு உணவு பழக்க வழக்கம் தான் காரணம்.

காய்கறி உணவுகளில் பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்துவதாலும், மலச்சிக்கல் வருவதாலும்தான் இதுபோன்ற புற்றுநோய் ஏற்படுகின்றது. இதனால் தான் தென்னிந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டாக அதிகரித்து வருகிறது.

எனவே எந்த வகையான உணவுகளை உண்ண வேண்டும் என்பது பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள பள்ளிக்கூடங்களில் உணவு முறை மற்றும் சுகாதார கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

மன அழுத்தம், புகை பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றால் கல்லீரல், கணையத்தில் புற்றுநோய் ஏற்படுகிறது. அகில இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு கோயம்புத்தூரில் வரும் டிசம்பர் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X