For Daily Alerts
கிரகணம்-குமரியில் பயணிகள் உற்சாகம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சிறப்பு கண்ணாடிகள் மூலம் சூரிய கிரகணத்தை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.
வானியல் நிகழ்வான முழு சூரிய கிரகணத்தை பார்வையிட வசதியாக இன்று கன்னியாகுமரியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குமரி மாவட்ட கிளை சார்பில் 10,000 மேற்பட்ட சிறப்பு கண்ணாடிகள் பொது மக்கள், சுற்றுலா பயணிகள், மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
சூரியோதயத்தை காண சிறப்பு வாய்ந்த கன்னியாகுமரியில் முழு சூரிய கிரகணத்தை பார்க்கவும் ஆயிரக்கனக்கான சுற்றுலா பயணிகள் அதிகாலை முதலே திரளத் தொடங்கினர். காலை 6.10 மணிக்கு சூரியன் உதயமானது. 6.15 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்படத் தொடங்கியது. 7.15 மணி வரை நீடித்த கிரகணத்தை சிறப்பு கண்ணாடிகள் மூலம் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கண்டு களித்தனர்.