For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீதக்காதி அறக்கட்டளை: இஸ்லாமிய தமிழ் இலக்கிய பரிசுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை, சீதக்காதி அறக்கட்டளையின் இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு மையம் சார்பில் வழங்கப்படும், 'செய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரிசு 2010'க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் இப்பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நூலுக்கு ரூ.30,000 வழங்கப்படும்.

இவ்வாண்டு அரபுத்தமிழ் – தோற்றம் – வளர்ச்சி – தேக்கம் ( அரபுத்தமிழ் இலக்கிய வரலாறு ) எனும் தலைப்பில் நூல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

நூல்கள் ஏ4 அளவில், கணினி அச்சில் இடம் விட்டு, 200 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். புத்தகமாக அச்சிட்டால் 22 செமீ x 14 செமீ டெம்மி புத்தக அளவு, 200 பக்கங்களுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும்.

தாளில் ஒரு புறம் தட்டச்சு செய்தோ அச்சடித்தோ அனுப்ப வேண்டும். தட்டச்சு செய்த நூலானாலும், அச்சிட்ட நூலானாலும் தேர்வுக்கு ஐந்து படிகள் அனுப்ப வேண்டும்.

தேர்வுக்குரிய நூல்கள் இம்மாதம் 31ம் தேதிக்குள் சீதக்காதி அறக்கட்டளைக்கு வந்து சேர வேண்டும். நடுவர் குழுவினரின் தேர்வில் சமநிலை ஏற்படுமாயின் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.

தேர்வுக்கு வரும் நூல்கள் எதுவும் நடுவர் குழுவினரால் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் அமையுமானால் அப்பரிசுத் தொகையைப் பழம்பெரும் தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்க ஆட்சிக்குழு முடிவெடுக்கலாம்.

தேர்வுக்கு வரும் படிகள் திருப்பி அனுப்ப இயலாது. வரும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் ஷெய்கு சதகத்துல்லாஹ் அப்பா நினைவு விழாவில் பரிசு வழங்கப்பெறும்.

இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு,

செயலாளர், சீதக்காதி அறக்கட்டளை,இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையம், எண் 6, மாடல் ஸ்கூல் ஆயிரம் விளக்கு, சென்னை 600 006 என்ற முகவரியிலோ, 044 2829 7335 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X