For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 ஆயிரத்து 30 எம்எல்ஏக்களில் 311 பேர் மட்டுமே பெண்கள்

By Staff
Google Oneindia Tamil News

Women
டெல்லி: இந்தியாவில் உள்ள மொத்த எம்எல்ஏக்கள் 4 ஆயிரத்து 30 பேரில், பெண்கள் 311 மட்டுமே உள்ளனர்.
அதாவது 28 மாநில சட்டசபைகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளில் 8 சதவீதத்துக்கும் குறைவாகவே பெண்கள் உள்ளனர்.

இதில் கவனிக்கத்தக்க வகையில், நாகாலாந்து மாநிலத்தின் 60 பேர் கொண்ட சட்டசபையில் ஒரு பெண்கள் கூட இல்லை.

பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகமுள்ள மாநிலங்கள் வரிசையில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. இங்குள்ள 200 எம்எல்ஏக்களில் 29 பேர் பெண்கள்.

இதற்கு அடுத்தபடியாக ஆந்திர சட்டசபையில் மொத்தமுள்ள 294 உறுப்பினர்களில் 12 சதவீதம் பேர்கள் பெண்களாக உள்ளனர்.

மூன்றாமிடத்தில் கம்யூனிஸ்டுகள் ஆளும் மேற்குவங்கம் உள்ளது. மேற்கு வங்க சட்டசபையில் 11.5 சதவீதம் பேர் பெண் உறுப்பினர்கள் உள்ளனர்.

எழுத்தறிவில் முதலிடத்தில் இருக்கும் கேரள மாநில சட்டசபையில் பெண்கள் ஐந்து சதவீதம் பேர் மட்டுமே இருக்கிறார்கள். அங்கு 140 எம்எல்ஏக்களில் 7 பேர் மட்டுமே பெண்கள்.

இதேபோல் கர்நாடகாவில் 225 பேர் கொண்ட சட்டசபையில் ஐந்து பேர் மட்டுமே பெண்கள். இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் பெண் எம்எல்ஏக்கள் 10 சதவீதம் பேரை கொண்டவை எட்டு மாநிலங்கள் மட்டுமே.

இவை மேற்குவங்கம், ராஜஸ்தான், ஆந்திரா தவிர்த்து மத்தியப் பிரதேசம் (231ல் 26 பேர்), சட்டீஸ்கார் (90ல் 10 பேர்), பீகார் (243ல் 26 பேர்), அசாம் (126ல் 13 பேர்) , ஹரியானா (90ல் 9 பேர்) ஆகியவையாகும்.

பெண் உறுப்பினர்களே இல்லாத நாகாலாந்தை விட இதர வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் சற்று பரவாயில்லை. இந்த இரண்டு மாநிலங்களிலும் தலா ஒரு எம்எல்ஏ இருக்கிறார்கள்.

அதிக சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 எம்எல்ஏக்களில் 27 பெண்கள் உள்ளனர். ஆனால் விகிதாச்சார அடிப்படையில் இது 6.69 சதவீதம் மட்டுமே.

தமிழகத்தில்...:

தமிழகத்தின் 234 எம்எல்ஏ பதவிகளில் 23 பேர் மட்டுமே பெண்கள். காங்கிரஸ் சார்பில் டி.யசோதா (ஸ்ரீபெரும்புதூர்), ராணி வெங்கடேசன் (சாத்தான்குளம்), காயத்ரிதேவி (மதுராந்தகம்) ஆகிய மூன்று பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

அதிமுக சார்பில் எஸ்.தேன்மொழி (நிலக்கோட்டை), செல்வி ராமஜெயம் (புவனகிரி), ஆர்.பிரேமா (அவினாசி), ஜெயலலிதா (ஆண்டிப்பட்டி), இளமதி சுப்ரமணியன் (வலங்கைமான்), எம்.சந்திரா (ராஜபாளையம்), பதர் சயீது (திருவல்லிக்கேணி) என 7 உறுப்பினர்கள் உள்ளனர்.

திமுகவில் ஏ.தமிழரசி (சமயநல்லூர்), சங்கரவல்லி சங்கரி நாராயணன் (அச்சரப்பாக்கம்), ஆர்.ராணி (உப்பிலியாபுரம்), பி.பிரபாவதி (தாராபுரம்), பூங்கோதை ஆலடி அருணா (ஆலங்குளம்), லதா அதியமான் (திருமங்கலம்), கீதா ஜீவன் (தூத்துக்குடி), அங்கையர்கண்ணி (சங்கராபுரம்) என எட்டு பெண் உறுப்பினர்கள் உள்ளனர்.

கம்யூனிஸ்டுகள் சார்பில் நன்னிலம் பி.பத்மாவதி (சிபிஐ), திருவட்டாறு லீமா ரோஸ் (சிபிஎம்), குடியாத்தம் ஜி.லதா (சிபிஎம்),
திண்டுக்கல் கே.பாலபாரதி (சிபிஎம்) என நான்கு பேர் உள்ளனர். பாமக சார்பில் காஞ்சிபுரம் எம்எல்ஏ கமலாம்பாள் மட்டுமே உள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X