For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகள்களின் இன்டர்நெட் பயன்பாடு – பொறுப்பான அம்மாவாக மிஷல் கண்டிப்புடன் கண்காணிப்பு

Google Oneindia Tamil News

Micelle Obama with daughters
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் மனைவி மிஷல், தனது இரு மகள்களும் இன்டர்நெட்டைப் பயன்படுத்துவதற்கு பல்வேறு கிடுக்கிப் பிடி கட்டளைகளைப் பிறப்பித்துள்ளாராம். மகள்கள் கட்டுப்பாட்டோடு வளர வேண்டும் என்ற அக்கறையில் இந்த கண்டிப்புகளை அவர் கடைப்பிடிக்கிறாராம்.

ஒபாமா, மிஷல் தம்பதிக்கு மலியா, சாஷா என இரு மகள்கள். மலியாவுக்கு 11 வயதாகிறது. சாஷாவுக்கு 8 வயது. சமீபத்தல் தனது மகள்களுடன் மெக்சிகோவுக்கு சுற்றுப்பயணமாக சென்றிருந்தார் மிஷல். அதிபரான பின்னர் ஒபாமாவுடன் இல்லாமல் தனியாக அவர் சுற்றுப்பயணமாக வெளிநாடு சென்றது இதுவே முதல் முறையாகும்.

அங்கு டிவி பார்க்க, இன்டர்நெட் பயன்படுத்த, மொபைல் போன்களைப் பயன்படுத்த தனது மகள்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தாராம் மிஷல்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இளைய தலைமுறையினர் இன்டர்நெட் பயன்படுத்துவதில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். இதில் நல்ல விஷயமும் உள்ளது; தவறான விஷயங்களும் உள்ளன. குறிப்பாக, 'பேஸ்புக்' போன்ற தளங்களை பயன்படுத்துவதில், ஏராளமான பிரச்னைகள் உருவாவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து தங்கள் குழந்தைகளுக்கு, பெற்றோரும், ஆசிரியர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தவறான தளங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து, என் மகள்களுக்கு எடுத்துக் கூறியுள்ளேன். இந்த விஷயத்தில் அவர்களுக்கு கட்டுப்பாடும் விதித்துள்ளேன்.

குழந்தைகள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். நானும், அதிபர் ஒபாமாவும், எங்கள் குழந்தைகளுடன் பேசுவதற்கு அதிக நேரத்தைச் செலவிடுகிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் மிஷல்.

உண்மையிலேயே பொறுப்பான அம்மாதான் மிஷல்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X