For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்பிள் ஐபேட்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள்

By Chakra
Google Oneindia Tamil News

IPad India
பெங்களூர்: இந்திய 'சுவையில்' இனி 'ஆப்பிளை' சுவைக்கலாம். ஆம், ஆப்பிள் ஐபேடுகளில், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் சேவையைப் பெற வாய்ப்பு உருவாகியுள்ளது.

உலகம் முழுக்கத் தமிழர்கள் விரவியிருந்தாலும் சில விஷயங்களில் தமிழைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அதில் ஒன்று ஐபேட். இதில் ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளைக் காண, பயன்படுத்த முடியாத நிலை இருந்தது.

தற்போது வெளியாகியுள்ள புதிய ஐஓஎஸ் (iOS 4.2.1) ஆபரேட்டிங் சிஸ்டம் இந்தக் குறையைப் போக்குகிறது. இதன் மூலம், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை ஆப்பிள் ஐபேடில் படிக்கவும் அதிலிருந்து இந்திய மொழிகளில் மெயில் அனுப்பவும் முடியும்.

இந்தியச் சந்தையின் மதிப்பை உணர்ந்து, அதை அங்கீகரிக்கும் வகையில் தனது ஐபேட்களில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளையும் இடம் பெற செய்துள்ளது ஆப்பிள்.

ஐபேடுகளில் தமிழ் சேவையைப் பெற வேண்டுமானால் புதிய ஐஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்திற்கு உங்ககளது ஐபேடை அப்கிரேட் செய்து கொள்ள வேண்டும். இந்த அப்கிரேடை செய்ய,

- முதலில் சாதாரண முறையில் ஐஓஎஸ் 4.2.1 அப்கிரேடுக்கு முயலுங்கள் (முடியாவிட்டால் அடுத்த ஸ்டெப்புகளுக்குப் போகலாம்)

- ஐடியூன்கள், குயிக்டைம் மற்றும் ஆப்பிள் தொடர்பான அனைத்தையும் ஐபாடிலிருந்து நீக்குங்கள்.

- பின்னர் மீண்டும் ஐடியூன்களின் புதிய வெர்சனை இன்ஸாடல் செய்யுங்கள்.

- பயர்வாலை நீக்குங்கள்.

- இப்போது மீண்டும் ஐஓஎஸ் ஆபரேடிங் சிஸ்டத்தை அப்கிரேட் செய்ய முயலுங்கள்.

இந்த முயற்சியில் வெற்றி பெற முடியாவிட்டால் உங்களது ஆபரேட்டிங் சிஸ்டம் பழையதாக இருக்கலாம். எனவே அதை முதலில் அப்கிரேட் செய்யுங்கள்.

அதற்கு முதலில் ஐடியூன் 10.1ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

உங்களது ஐபேடை கம்ப்யூட்டருடன் பொருத்துங்கள்.

ஐடியூன்களை ரன் செய்யுங்கள், பின்னர் டிவைஸை கிளிக் செய்யுங்கள்.

பின்னர் ஆபரேட்டிங் சிஸ்டம் அப்கிரேடை கிளிக் செய்து அதில் கூறப்படுவதை பின்பற்றுங்கள்.

ஆபரேட்டிங் சிஸ்டம் அப்கிரேட் ஆகி விட்டால், உங்களது மொழியில் நீங்கள் பிரவுஸ் செய்ய முடியும்.

ஐபேடுகளில் தமிழ் என்பது மிகப் பெரிய விஷயமாக கருதப்படுகிறது. ஐபேடுகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், துபாய், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள்தான் மிகப் பெரிய சந்தையாக உள்ளன. தற்போது தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை இணைத்திருப்பதன் மூலம் இது இனி இந்தியாவிலும் மிகப் பெரிய சந்தையாக மாறவாய்ப்புள்ளது.

புதிய ஐஓஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டமில், புதிய மொழிகள், அகராதிகள், கீபோர்டுகள் ஆகிய வசதிகள் உள்ளன. இருப்பினும் அதில் எந்த மொழிகளை ஐஓஎஸ் ஏற்கும் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளை நாம் பயன்படுத்த முடியும்.

English summary
Finally, Apple got the Indian taste! The much awaited Tamil "touch" is now available on Apple iPads. With the release of the new operating system iOS 4.2.1, iPad users can read Tamil and Indian languages on it.
 
 Once we all dreamed about reading Tamil and other Indian languages on iPads. But the innovative giant Apple didn"t show any mercy to vast Indian readers around the globe. But, now Apple has understood the Indian market value and included "Indian language support" in the new OS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X