For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடந்த 3 ஆண்டுகளில் விலங்கியல் பூங்காக்களில் 75 புலிகள் மரணம்

Google Oneindia Tamil News

Tiger
டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள விலங்கியல் பூங்காக்களில் 75 புலிகள் இறந்துள்ளன.

நாடு முழுவதும் உள்ள விலங்கியல் பூங்காக்களில் வைக்கப்பட்டிருக்கும் புலிகள் விலங்குகளுக்கு இடையேயான சண்டை, நோய், வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் உயிர் இழக்கின்றன. இவ்வாறு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 75 புலிகள் இறந்துள்ளன.

கடந்த 2009-10-ம் ஆண்டில் 28 புலிகள் இறந்துள்ளன. மேலும், 2008-09-ல் 25 புலிகளும், 2008-07-ல் 22 புலிகளும் உயிர் இழந்துள்ளன.

இந்த ஆண்டிற்கான எண்ணிக்கை துள்ளியமாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் சுழ்நிலை புலிகளுக்கு உகந்ததாக இல்லை. கடந்த மாதம் கூட கர்நாடகாவில் உள்ள பன்னேர்கட்டா விலங்கியல் பூங்காவில் 7 புலிகள் இறந்தன. இவற்றில் 2 வயோதிகத்தால் உயிர் இழந்தன.

மேலும், 5 புலிகள் அழுகிய மாமிசத்தை உண்டதினால் அதில் இருந்த சல்மோனெல்லா பாக்டீரியா தாக்கி இறந்தன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X