For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரான்ஸ்-அக். 31ம் தேதி கழக 9வது ஆண்டு விழா

Google Oneindia Tamil News

பாரீஸ்: பிரான்ஸில் உள்ள கம்பன் கழகத்தின் 9வது ஆண்டு விழா அக்டோபர் 31ம்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இத்தகவலை கம்பன் கழக செயலாளர் பெஞ்சமின் லெபோ தெரிவித்துள்ளார்.

31.10.2010 ஞாயிற்றுக் கிழமைக் காலை 10.00 மணிமுதல் மாலை 20.30 மணி வரை விழா நடைபெறுகிறது. பாரீஸில் உள்ள மெய்சான் டி லா இன்டி ஹோட்டலில் விழா நடைபெறும்.

கவியரங்கம், பட்டிமன்றம், பட்டயம் வழங்குதல், சிறப்புரைகள் உள்ளிட்டவை இதில் இடம் பெறுகின்றன.

31ம் தேதி காலை நடைபெறும் நிகழ்ச்சிக்கு பண்டிட் அரிஅர சிவாச்சாரியார் தலைமை தாங்குகிறார். சென்னையச் சேர்ந்த கலை இலக்கிய அறிஞர் இந்திரன் கம்பனில் அழகியல் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

பிற்பகல் 2 மணிக்கு கம்ப சூத்திரம் என்ற தலைப்பில், கவியுரை நடைபெறும். கவிச்சித்தர் கண. கபிலனார் இதை வழங்குகிறார்.

3 மணிக்கு கம்பனிடம் ஒரு கேள்வி என்ற தலைப்பிலான வினா விடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மாலை 5.30 மணியளவில் கம்பன் பட்டயமும், விருதும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் கலந்து கொண்டு பட்டயங்களை வழங்குகிறார் இந்திய தூதரக அலுவலர் நாராயணன். நற்றமிழ்ப் பணிப் பட்டயத்தை பேராசிரியர் முடியப்பநாதனும், கவிதைப் பணி பட்டயத்தை கவிதாயினி எழில் துஷியந்தியும், பேச்சுப் பணிக்கான பட்டயத்தை திருமதி பூங்குழலி பெருமாளும், எழுத்துப் பணிப் பட்டயத்தை பேராசிரியர் ச.சச்சிதானந்தமும் பெறுகிறார்கள்.

மாலை 6.30 மணியளவில் பேராசிரியர் லெபோ பெஞ்சமின் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறும். தீமையில் பெரிதும் திகைக்கச் செய்பவர் கூனியே, சூர்ப்பணகையே, ராவணனே என்ற தலைப்பில் இது நடைபெறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X