For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நொறுக்குவதைக் குறைப்பது எப்படி?

Google Oneindia Tamil News

Snakcs at office
ஆபீஸில் நொறுக்குத் தீணியைக் குறைக்க சில டிப்ஸ்கள்

சிலருக்கு உடல்வாகு ஏகமாக இருக்கும். சைஸ் ஜீரோவை அடைவது என்பது பெண்களுக்கான பெரிய பிரச்சினை. அதேபோல சைஸ் பீரோ அளவிலிருந்து குறைவது என்பது பெரும்பாலான ஆண்களுக்கு பெரும் பிரச்சினை.

இன்று முதல் நான் இப்பபடித்தான் சாப்பிடுவேன் என்று பலரும் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இருக்கவும் செய்கிறார்கள். ஆனால் ஆபீஸுக்குப் போய் விட்டால், அத்தனையும் போண்டியாகி விடுகிறது.

உணவுக் கட்டுபாட்டில் இருக்க முயல்வோருக்கு இடைஞ்சலான இடம் அலுவலகம் தான். விடுமுறை விருந்து, அடிக்கடி நடக்கும் பிறந்தநாள் விழாக்கள், அவ்வப்பொழுது காபி, டிபன், சுகாதாரமற்ற உணவுகள் அனைத்து இடங்களிலும் உள்ளது.

என்ன தான் நாம் கட்டுப்பாட்டோடு இருந்தாலும், பக்கத்தில் இருப்பவர்கள் பக்கோடா, பாப்கார்ன், கார்ன் பிளேக்ஸ் என்று வாயை போட்டு அரைத்துக் கொண்டிருந்தால், நமக்கும் வயிற்றை நமநமவென நச்சரிக்கத்தானே செய்யும்.

அடுத்தவர் சாப்பிடும்போது நாம் மட்டும் வாயை கட்டிக் கொண்டிருக்கத் தேவையில்லை என்று ஒரு செகன்ட் நினைத்தால் கூட போதும் டயட், டவுட் ஆகி விடும்.

இப்படிப்பட்ட நிலையில் நாம் எப்படி சூதானமாக இருக்க வேண்டும். அலுவலகத்திலும் நம்மால் வெற்றிகரமாக டயட்டை கடைப்பிடிப்பது எப்படி என்பதற்கு சில டிப்ஸ்கள்...

1. நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பதாக உங்கள் சகாக்களிடம் சொல்லி வையுங்கள். பிறகு அவர்கள் உங்களுக்கு நொறுக்குத்தீனி கொடுப்பதை நிறுத்தி விடுவார்கள். தெரிந்தும் அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் நீங்கள் தான் கட்டுப்பாட்டுடன் (கஷ்டம்தான், ஆனால் வேறு வழியில்லை) வேண்டாம் என்று சொல்ல வேண்டும்.

2. பிறந்தநாள் அல்லது விடுமுறைக் கொண்டாட்டங்களின் போது உங்கள் மேசையில் உங்களுக்கான, கலோரிகள் குறைந்த சத்தான உணவுப் பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். விழாவின்போது மற்றவர்கள் கேக்கை சாப்பிட்டால் நீங்கள் உங்க ஐட்டத்தை எடுத்து ஒரு வெட்டு வெட்டுங்கள்.

3. இப்படி கடும் கட்டுப்பாட்டோடு இருந்தும், ஆசையை அடக்க முடியாமல் பீட்சாவையோ அல்லது குக்கீயையோ தூக்கி வயிற்றில் போட வேண்டும் என்று போலத் தோன்றினால் ஏன் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறோம் என்பதை ஒரு செக்ன்ட் நினைத்துப் பாருங்கள். அப்படி நினைத்தால் கண்டிப்பாக ஆசையைக் கட்டுப்படுத்தலாம்.

எல்லாம் சரி, இதெல்லாம் சாப்பாட்டுக்கு முன்பா அல்லது பின்பா என்று மட்டும் தயவு செய்து கேட்டு விடாதீர்கள்...!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X