• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு 101 கிலோ தூய நெய் பரிசு-ஹரியானா அரசு

|

Hariyana player Krihsna Poonia
சண்டிகர்: காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரொக்கப் பரிசு, கார் உள்ளிட்டவற்றுடன் 101 கிலோ சுத்தமான நெய்யையும் சேர்த்து வழங்குகிறது ஹரியானா அரசு.

நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள்தான் பதக்கங்களைக் குவித்து விட்டனர். இவர்களை பெரிய அளவில் கெளரவிக்கிறது அந்த மாநில அரசு.

தங்கப் பதக்கம் வென்ற ஒவ்வொரு வீரர், வீராங்கனைக்கும் ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசு, ஒரு மாருதி கோல்ட் எஸ்எக்ஸ்4 கார் ஆகியவற்றைத் தருகிறது ஹரியானா அரசு.

இதுபோக அவர்களுக்கு தலா 101 கிலோ தூய நெய்யையும் பரிசாக அளிக்கவுள்ளதாம்.

எனவே கார், பணத்தைப் பெற்றுச் செல்லும்போது கை நிறைய நெய் டின்னையும் வீரர், வீராங்கனைகள் பரிசாகப் பெறவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X