For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐயப்ப பக்தர்களுக்காக 'ஹரிவராசனம்'!

By Super
Google Oneindia Tamil News

Ayyappa
சென்னை: ஹரிவராசனம் என்ற பெயரில் புதிய இணைய தளம் ஒன்று அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக தொடங்கப்பட்டுள்ளது.

'மாத்ருபூமி' மலையாள நாளிதழ் சார்பில், துவங்கப்பட்டுள்ள இந்த புதிய இணைய தளம் தமிழ், மலையாளம், ஆங்கிலம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

சபரி மலை அய்யப்பன் கோவில் பூஜை நேரம், நெய்அபிஷேக வழிபாடு உள்பட அனைத்து விவரங்களையும் இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம். அய்யப்ப பக்தர்களின் கோரிக்கைகள், குறைளையும் இதில் தெரிவிக்கலாம்.

இந்த புதிய இணையதளத்தை, குருவாயூரப்பன் கோவில் மேல்சாந்தி கே.கேசவன் நம்பூதிரி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாத்ருபூமி சென்னை மேலாளர் சுனில் ராமச்சந்திரன், மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில் நிர்வாக அதிகாரி அனீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இணையதள முகவரி: www.harivarasanam.in

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X