For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் இன்று மீலாது பெரு விழா

By Staff
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் மீலாது பெரு விழா இன்று நடைபெறுகிறது.

இன்று இன்று எட்டரை மணியளவில், துபாய், தேரா, கோட்டைப் பள்ளிவாசலில் விழா நடைபெறுகிறது.

மதுக்கூர் முஸ்லீம் சுன்னத் வல் ஜமாத் கெளரவ ஆலோசகர் இமாமுதீன் தலைமை தாங்குகிறார். மெளலானா மெளலவி ஆவூர் ஆ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி சிறப்புரை நிகழ்த்துகிறார்.

சேலம், நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் மெளலவி அல்ஹாஜ் அப்ஸலுல் உலமா எம்.முஹம்மது அபுதாஹிர் ஆலிம் பாக்கவி பாஸில் சிறப்புரையாற்றுகிறார்.

அனைத்து பெரியோர்களும், உலமாக்களும், சகோதரர்களும் வருகை தந்து விழாவை சிறப்பித்து நற்பயன் அடைய விழாக் குழுவினர், மதுக்கூர் முஸ்லிம் சுன்னத் வல் ஜமாத் - ஐக்கிய அரபு அமிரகம் அழைக்கிறது.

குவைத்தில் ஸீறத்துன் நபி சிறப்பு மாநாடு:

அதே போல குவைத் சிட்டி மிர்காப் பகுதியில், குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் சார்பில் ஸீறத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு நடைபெற்றது.

மிர்காப் பகுதியில் உள்ள சூக்குல் வதனிய்யா பள்ளிவாசலில் கடந்த 26ம் தேதி இந்நிகழ்ச்சி நடந்தது.

மாநாட்டை ஒட்டி, திருக்குர்ஆன் ஒப்புவித்தல் (ஹிஃப்ழு) போட்டி, குவைத் வாழ் உலமாக்கள் பங்குபெறும் சிறப்பு கருத்தரங்கம், சங்கத்தின் பிறை செய்தி மடல் இதழின் 5ம் ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு ஆகியவை நடந்தது.

திருக்குர்ஆன் ஒப்புவித்தல் போட்டியில் 40 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். அடுத்து கருத்தரங்கம், 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வாழ்வியல் ஒழுங்குகள்' என்ற தலைப்பில் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து குவைத் அவ்காஃப், இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மாநாடு நடந்தது.

பின்னர் இறுதியாக கே-டிக் பிறை செய்தி மடல் இதழின் 5ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. குவைத் இந்திய தூதர் அஜய் மல்ஹோத்ரா அவர்கள் சிறப்பு மலரை வெளியிட முதல் பிரதியை அல்ஹாஜ் M. அப்துர் ரஹ்மான் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் உள்ளிட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், களப்பணியாளர்கள், ஸீரத்துன் நபி விழாக் குழுவினர் மற்றும் பிறை செய்தி மடல் மலர்க் குழுவினர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் 965 97872482 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X