For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மன நலமற்றவர்களுக்கும் மனம் இரங்குவோம்

By Chakra
Google Oneindia Tamil News

கொட்டும் மழையானாலும் சரி, கொளுத்தும் வெயினாலும் சரி இரண்டையும் சமமாக பாவித்து கால் போன போக்கில் எங்கே போகிறோம் என்று தெரியாமலே போகும் மனிதர்கள் இவர்கள்....

இவர்களின் பலர் குடும்பத்தினரின் ஓதுக்கல்களாலும், துரோகத்தாலும் மட்டுமின்றி பல்வேறு சம்பவங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டு அழுக்கு உடையோடும், எண்ணை அறியாத முடியோடும், சவரம் செய்யாத தாடியோடும் ரோட்டில் கிடக்கும் எச்சில் இலைகளை பொறுக்கி திண்பதும், வேண்டாம் என வீசி எறிந்த கட்டை பீடி, துண்டு சிகரெட்களை பொறுக்கி பற்ற வைத்து சுவாசிப்பவர்களாகவும், மரத்தடி நிழலில் இந்த ஆன்மாக்கள் இளைப்பாறி கிடப்பதும், பசி மயக்கத்தில் துவண்டு கிடப்பதும் நாம் தினம்..தினம்....இமயம் முதல் குமரி வரை அனைத்து நகரங்களிலும் சாலைகளில் நாம் காணும் காட்சிகள்தான்.

சாலைகளில் இப்படி அலையும் இந்த ஆன்மாக்களில் பலவிதம். மனநிலை பாதிக்கப்பட்ட மனிதனுக்கும் தனி தனி ரசனை உள்ளது.

மனநிலை பாதிப்புகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மனநிலை பாதிக்கப்பட்டு தெளிவு பெற்றோரும் உண்டு. தெளிவு பெறாமல் தேசத்தில் அனாதையாய் வாழ்ந்து செத்தவர்களும் உண்டு.

சாதாரணரர்கள் என்றில்லாமல், பெரிய இடத்து வாழ்க்கை, முப்பாட்டன் தேடிய சொத்துகள், நஞ்சை, புஞ்சை, தோப்பு என பல நூறு ஏக்கர் நிலங்கள் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்களும் கூட, மன இறுக்கம், மனச்சிதைவு உள்ளிட்ட பல பிரச்சினைகளில் சிக்கி மன நலம் பாதித்து தெருவுக்கு வரும் நிலையும் உள்ளது.

இப்போது தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள், பெண்கள், வயதானவர்கள் தெருவில் அனாதரவாகவிடப்படுவது அதிகரித்து வருகிறது. உள்ளூர்களில் விட்டால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து வெளியூர்களுக்குப் போய் விட்டு விட்டு வந்து விடும் இரக்கமற்றவர்கள் அதிகரித்து விட்டனர்.

சொத்துப் பிரச்சினையால் சண்டைகள் மூண்டு, முதியவர்களை அனாதைகளாக தெருவில் விடுவது, கள்ளத் தொடர்புகளால் மன நலம் பாதிக்கப்பட்டு தெருக்களில் அலைவது என இவர்களின் பின்னணியில் பல கதைகள்.

குடும்பத்தில் அன்னோன்யமான உறவு சங்கிலி அறுந்துபோய் மன இறுக்கத்துக்கு தள்ளப்பட்டு தனிமையை விரும்ப தொடங்கி முடிவில் மனநோயாளியாக மாறும் அவலுமும் இச்சமூகத்தில் இன்றும் உள்ளது.

மது, கஞ்சா, அபின் மாத்திரைகள் உள்ளிட்ட பல்வேறு போதை பழக்க வழங்களுக்கு அடிமையாகி மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் உண்டு.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 75 சதவீதம் பேர் வீதிகளில்தான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், டீ கடையிலோ, உணவகங்களிலோ கையேந்தி நின்றால் மனிதாபிமானம் நிறைந்தவர்கள் ஏதோ திண்பண்டம், உணவு வாங்கி கொடுக்கின்றனர்.

ஆனால் இதை கூட ஜீரணிக்க முடியாத பல ஹோட்டல், டீக்கடை உரிமையாளர்கள் வெந்நீரை ஊற்றியும், அடித்து விரட்டும் சம்பவங்களும் நெல்லை பகுதிகளில் நடந்துள்ளன. நடந்தும் வருகின்றன

பல சாலைவிபத்துகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பலியாவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மனநோயாளிகளுக்கு கீழ்ப்பாக்கத்தில் மட்டு்மே மருத்துவமனை உள்ளது. இதனை அதிகரிக்கும் விதமாக தென்மாவட்ட தலைநகரங்களில் மனநல மருத்துவமனைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து மன இறுக்கத்தோடு வாழும் மனிதர்களை சீர்படுத்தவும், மனநோயாளிகளை குணமாக்கவும் நடவடிக்கை எடுப்பது மிக மிக அவசியம்.

மதுரையில் ஒரு மனநலமருத்துவமனை அமைக்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில்தான் அறிவித்துள்ளது. அது வந்த பிறகாவது தெருக்களில் மன நோயாளிகள் ஆதரவற்று திரியும் நிலை மாறுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

அதை விட முக்கியமாக பொதுமக்களுக்கும், மனநலமற்றவர்கள் மீதான கருணை அதிகரிக்க வேண்டும். தெருக்களில்தானே திரிகிறார்கள், நமக்கென்ன கவலை என்றில்லாமல், அவர்களை காப்பகங்களிலோ, மருத்துவமனைகளிலோ சேர்க்க தாராள மனதுடன் முன்வர வேண்டும். சமூகத்தின் மன நலம் நல்லதாக இருந்தால் நிச்சயம் இதுபோன்ற மனநலமற்ற அப்பாவிகளுக்கும் வழி பிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X