For Daily Alerts
Just In
உலகி்ல் வேகமாக அழிந்து வரும் புலிகள்!

நூறு ஆண்டிகளுக்கு முன் இவ்வுலகில் 1,00,000 புலிகள் இருந்தன. ஆனால், தற்போது வெறும் 3,200 புலிகள் மட்டுமே உள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் தற்போது 1411 புலிகள் உள்ளன.
காட்டு விலங்குகளில் சிங்கத்திற்கு அடுத்த கம்பீரமான விலங்கு புலிதான். புலிகள் அதன் தோல், பல், எலும்பு உள்ளிட்ட உறுப்புகளுக்காக வேட்டையாடப்படுகிறது. மனிதனின் பிடியில் அவ்வளவு சீக்கிரம் சிக்காத புலிகள், இயற்கை சீரழிவுகளில் சிக்கி வேகமாக அழிந்து வருகின்றன.
அழிந்து கொண்டிருக்கும் புலிகள் இனத்தை பெருக்குவது குறித்து இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலேசியா, வங்காள தேசம் உள்ளிட்ட 13 நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
மனிதனுக்கும், இயற்கைக்கும் நடக்கும் இந்த போட்டி தொடர்ந்தால், நம் சந்ததியினர் புலிகளை படங்களில் மட்டும் தான் பார்க்க முடியும்.