For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு டாக்டர் பட்டம்!

By Chakra
Google Oneindia Tamil News

Tirumavalavn
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்பியுமான தொல். திருமாவளவனுக்கு இறையியல் கல்லூரியான குருகுலம் அகாடமி சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சமூகப் பணி ஆற்றி வருகிறார்.

இந்தப் பணியைப் பாராட்டி உலக அளவில் செயல்பட்டுவரும் இறையியல் கல்லூரியான குருகுலம் அகாடமி, டாக்டர் (முனைவர்) பட்டம் வழங்க உள்ளது.

2009ம் ஆண்டுக்கான டாக்டர் பட்டத்தை திருமாவளவனுக்கு இக் கல்லூரி வரும் 18.07.2010 அன்று வழங்க உள்ளது என்று கூறியுள்ளார்.

சமூகப் பணி மற்றும் இறைதொண்டு ஆகியவற்றில் சிறப்பான முறையில் பணியாற்றிய சிந்தனையாளர்கள் மற்றும் களப் போராளிகளுக்கு இக்கல்லூரி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X