For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உல்லாச பயணத்தை விட புனித யாத்திரையை விரும்பிய மக்கள்

Google Oneindia Tamil News

சென்னை: ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் புகழ் பெற்ற சுற்றுலாத்தளங்களுக்கு ஏராளமான மக்கள் சென்றதால் தமிழ்நாட்டின் சுற்றுலா துறையின் வருவாய் 30% அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் பெரம்பாலோர் உல்லாச பயணத்தை விட புனித யாத்திரையையே விரும்பியதாக கணக்கெடுப்பு காட்டுகிறது.

புகழ் பெற்ற சுற்றுலாத்தளங்களான உதகமண்டலம், கொடைக்கானல், ஏர்காடு, ஏலகிரியை விட புனித தலங்களான பழனி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, இராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு கடந்த 2 மாதங்களில் மக்கள் அதிக அளவில் சென்றுள்ளனர்.

ஏப்ரலில் பழனிக்கு 6,15,236 பேரும், கன்னியாகுமரிக்கு 6,12,536 பேரும் சென்றுள்ளனர். இது கொடைக்கானலுக்கும், உதகமண்டலத்திற்கும் சென்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

இந்த ஏப்ரலில் மட்டும் புனித தலங்களிற்கு சுமார் 1 லடசம் சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். மே மாதத்திற்கான பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தை விட 15% அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. உதகமண்டலத்தற்கு சென்றிருந்த பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரலை விட மே மாதத்தில் 25% அதிகரித்துள்ளது.

தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா துறை ஏற்பாடு செய்திருந்த கோடை திருவிழாவிற்கு 5 லடசத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். கோடை திருவிழா இன்று நிறைவடைகிறது.

அதிகாரி ஒருவர் கூறுகையில்: கடந்த இரண்டு மாததிற்கான வருவாய் 15% அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏராளமானோரின் வருகையால் அது 30% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு வருமானத்தை விட அதிகம் என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X