For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கவிப்பேரரசு வைரமுத்துவின் ஆயிரம்பாடல்கள் நூல்வெளியீடு

Google Oneindia Tamil News

திரைத்துறையில் உயிரோட்டமான, இலக்கிய நயம் மிக்க, மண்ணின் மணம்சார்ந்த பாடல்கள் பலவற்றைத் தந்தும் திரைப்பாடல்கள் வழியாகத் தேசிய விருது உள்ளிட்டவற்றைத் தமிழுக்குப் பெற்றுத் தந்தும் உலக அளவில் புகழ்பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் ஆயிரம் பாடல்கள் நூல்வெளியீட்டு விழா இன்று மாலை 4 மணியளவில் சென்னையில்
நடைபெறுகின்றது.

தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் நூலை வெளியிட முன்னணித் திரைக்கலைஞர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதற்படியினைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் விழாவில் திரைத்துறை சார்ந்த புகழ்பெற்ற இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள்,நடிகர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகின்றனர்.

முன்னணிப் பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன், ஏசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன், பி.சுசிலா, எஸ்.ஜானகி, வாணிஜெயராம், ஹரிகரன், சுஜாதா, மனோ,உன்னிமேனன், உன்னிகிருஷ்ணன், செல்வி சின்மயி மற்றும் பலர் "எனக்குப் பிடித்த முத்து" என்னும் தலைப்பில் பாடல்களைப் பாட உள்ளனர்.

லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழு இசையமைப்பில் ஈடுபட உள்ளது. விழாத்தொகுப்பு பி.எச்.அப்துல் அமீது

ஆயிரம் பாடல்கள் நூல்சிறப்பு

ஒரே நூலாக ஆயிரம் பாடல்கள்
முப்பதாண்டு உழைப்பு
மூன்றாண்டுத் தொகுப்பு
இலக்கியத் தரத்தில் தொகுக்கப்பெற்றவை
ஆயிரம் பாடல்களுக்கும் தனித்தனி முன்னுரை
முதல்வர் கலைஞரின் 8 பக்க அணிந்துரை
கவிப்பேரரசு வைரமுத்துவின் 15 பக்க ஆய்வுரை
1216 பக்கங்கள்

"இலக்கிய வண்டுகளின் பூவனம்-இந்த
ஆயிரம் பாடல்கள் ஆவணம்"

இணையப்பூங்கா இணையதளத்திலும் செய்திகள் வெளியாகும். கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்வுகளைக் கண்டு மகிழலாம்.

நன்றி: http://muelangovan.blogspot.com

English summary
CM Karunanidhi to release Poet Vairamuthu's Aayiram Paadal book today. Actors Rajinikanth and Kamal Hassan to recieve the first copy. The book contains 1000 songs and poems of Vairamuthu in 1216 pages.CM has given 8 page review for this book.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X