For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு

Google Oneindia Tamil News

தென்காசி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கிற்காக நடை திறக்கப்பட்டதையடுத்து குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வருகை இந்தாண்டு அதிகரித்துள்ளது. குறிப்பாக மெயின் அருவியில் சீசன் காலம் போன்று கூட்டம் அலைமோதுகிறது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் சபரி்மலையில் மண்டல பூஜை முடிந்து நடை சாத்தப்பட்டதால் குற்றாலத்தில் கூட்டம் குறைந்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மகரவிளக்கிற்காக நடை திறக்கப்பட்டதால் மெயினருவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இரவு வேளையில் மட்டும் அதிகமான பக்தர்கள் கூட்டம் இருந்த நிலையில் நேற்று முன்தினம் பகலிலேயே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

English summary
Ayappa devotees throng Courtallam because of Makaravilakku festival. Apart from them a large number of tourists are also seen in Courtallam as this is half yearly exam holiday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X