For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொட்டல்புதூர் பள்ளிவாசலில் கந்தூரி விழா வரும் 6ம் தேதி துவக்கம்

Google Oneindia Tamil News

ஆழ்வார்குறிச்சி : பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா வரும் 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

கந்தூரி விழாவில் முதல் நிகழ்ச்சியாக வரும் 6ம் தேதி பகல் 2 மணிக்கு யானை மீது அலங்கரிக்கப்பட்ட கீழுர் ஜமாத் நிறைபிறை கொடி ஊர்வலம், மேலதாளங்கள், வாணவேடிக்கையுடன் நகர் எங்கும் ஊர்வலமாக வந்து பின்னர் மாலை 6 மணி அளவில் பள்ளிவாசல் வளாகத்தில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.

15ம் தேதி இரவு 8 மணி அளவில் பச்சை களை ஊர்வலம், 16ம் தேதி காலை 9 மணிக்கு சுவாமிகம் முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு வைபவமும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றம் , பகல் 2 மணிக்கு மேலூர் ஜமாத் 10ம் இரவு கொடி ஊர்வலம் ஆரம்பித்து மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

இரவு 10 மணிக்கு ரவணசமுத்திரத்தில் இருந்து யானை முன்வர மேளதாளங்களுடன் அலங்கரிக்கப்பட்ட சந்தனகூடு ஊர்வலம் துவங்கும்.

17ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சந்தன கூடு பள்ளிவாசல் வந்து இனாம்தார் எஸ்பி ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகும் வைபவமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தீப அலங்கார திடலில் தீப அலங்காரமும், 19ம் தேதி மாலை ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 20ம் தேதி அதிகாலை 5 மணிக்கு பக்தர்களுக்கு நேர்ச்சனை வழங்கப்படுகிறது.

English summary
Pottalputhur Muhaideen Andavar pallivasal kanthuri festival will begin on March 6 in Alwarkurichi. The festival will end on March 19
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X