For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

களக்காடு நாராயணசாமி கோவிலில் பொங்கி வழியும் அதிசய நீருற்று-மக்கள் வியப்பு

Google Oneindia Tamil News

களக்காடு: களக்காடு அருகே நாராயணசாமி கோவிலில் பொங்கி வழியும் அதிசய நீருற்று ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் ஊற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

களக்காடு அருகே உள்ள மாவடி புதூரில் நாராயணசாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் இந்த கோவிலில் தேரோட்ட திருவிழா நடத்தப்படும்.

கோவில் கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் பழுதடைந்து காணப்பட்டது. எனவே பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புது கட்டிடம் கட்ட பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த நவம்பர் மாதம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பாலபிரஜாதிபதி அடிகளார் அடிக்கல் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

16 பில்லர்கள் அமைத்து கட்டிடம் கட்ட தீர்மானித்து 16 குழிகள் தோண்டப்பட்டது. இதி்ல் கோவில் கருவறை அமையும் இடத்தில் தோண்டப்பட்ட குழியில் 4 அடி ஆழத்திலேயே தண்ணீர் வந்துள்ளது. மற்ற குழிகளில் தண்ணீர் இல்லை.

இந்த அதிசய நீருற்றை பக்தர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இதை கேள்விபட்ட சுற்றுப்புற கிராம மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து நீருற்றை பார்த்து செல்கின்றனர்.

English summary
Narayanasamy temple is situated near Kalakkadu. Since the temple building is old, devotees have decided to build a new one. When they dug the earth, they found a magical fountain in 4 feet. A large number of devotees and nearby villagers are coming to see this magical fountain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X