For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1.5 லட்சம் குழந்தைகளுக்கு தமிழ்-ஆங்கில அகராதி : பிப் 15ல் வழங்கப்படும்

Google Oneindia Tamil News

Dictionary
நெல்லை: தமிழகம் முழுவதும் நடுநிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு படிக்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி தமிழ்-ஆங்கில அகராதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் ஆங்கில அறிவுத் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம் கடந்த ஆண்டு முதல் நடுநிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு தமிழ்-ஆங்கில அகராதி வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாண்டில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தலா 4954 பேர் வீதம் மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 620 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்-ஆங்கில அகராதி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பெண் திட்டக்கூறு சார்பி்ல் 2 ஆயிரத்து 227 மாணவிகளுக்கும், எஸ்சி, எஸ்டி தி்ட்டக்கூறு சார்பில் 2 ஆயிரத்து 227 பேருக்கும், சிறுபான்மை திட்டக்கூறு சார்பில் 500 மாணவ, மாணவிகளுக்கும் அகராதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அகராதிகள் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் அச்சிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்ப்ப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 90 குறுவள மையங்களை ஆய்வு செய்து தலா 50 மாணவ, மாணவிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதி ஒருநாள் வாழ்வியல் திறன் பயிற்சி அளித்து முகாம் முடிவில் அனைவருக்கும் இந்த அகராதி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
In order to increase the English knowledge among government school students, TN government has started giving Tamil-English dictionaries to 6th std students from last year. This year dictionaries will be given on february 15. 1. 5lakh students will get benefitted by this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X