For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை கண்காட்சியில் உலகிலேயே மிக சிறிய பைபிள்

Google Oneindia Tamil News

கோவை: உலகிலேயே மிக சிறிய பைபிள் கோவையில் நடைபெறும் பைபிள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

கோவை மணிகூண்டு அருகில் தமிழ்நாடு இவாஞ்சலிக்கல் லுத்தரன் ஆலயம் (டி.இ.எல்.சி.) உள்ளது. இந்த ஆலயத்தின் ஹாலில் ஒ.எம்.புக்ஸ் நிறுவனம் சார்பில் சர்வதேச பைபிள் கண்காட்சி டிசம்பர் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில் கிறிஸ்தவ நூல்கள், தியான நூல்கள், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கான நூல்கள் என்று ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இசை வெளியீடுகளான இன்டெக்ரிடி, மாராநாதா, கிங்ஸ்வே, ஹில்சாங்ஸ் மற்றும் ஆதென்டிக் உள்ளிட்ட இசை சிடிக்கள், பரிசு பொருட்கள், அலங்கார பொருட்கள் உள்ளிட்டவை கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் உள்ள டேய்டன், ஒஹையோவில் உள்ள என்.சி.ஆர். ஆய்வுத் துறையினரால் சிலைடு வடிவிலான பைபிள் தயாரிக்கப்பட்டது. உலகிலேயே மிக சிறிய பைபிளான இந்த பைபிள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இதனை நுண்நோக்கியால் மட்டுமே படிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
World's smallest bible has reached in Coimbatore. The bible is exhibited in the bible exhibition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X